108
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
“நீ ஒன்றும் செய்ய வேண்டாம். இங்கு நில்லாமலாவது போ. திருமணம் நடக்கவேண்டும் என்ற ஆசை இருந்தால் உன் பெற்றோரை உடனே அனுப்பி வை. அந்தக் கிழவன் மகன் நாளையே வந்தாலும் வந்துவிடுவான் போய்வா.
66 என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? பெற்றோர் யாரும் எனக்கு இல்லையே.
- சோர்ந்துபோய்விட்டாள் வீரமங்கை.
நெருங்கிக் கேட்டான். “வந்த கிழவன் யார் என்று தெரியுமா?” "நம்பி என்பது பெயராம்.
"அரிக்குடி நம்பியா? என்ன சொல்லிப் போனான்?
66
66
மகனை அனுப்பிவைப்பதாகப் போயிருக்கிறார்.
இன்னும் வரவில்லையே. விடு கவலையை. நான் அவர் அனுப்பிவைத்தவன் என்று நாளைக்கே வந்துவிடுகிறேன்.
"மாட்டிக்கொண்டால்...
“மாட்டிக்கொள்ளவா? அது வரிப்புலி வாழ்க்கையிலே நடக்கமுடியாத ஒன்று.
- ஓர் ஒலி கேட்டது.
66
66
‘அது என்ன ஒலி? காட்டுப் பூனையா?
"ஆமாம் காட்டுப் பூனைதான் என்றாள் மங்கை
அந்நேரம் கதவைத் தட்டும் ஒலி கேட்டது.
'விரைந்து போ! இதோ வீட்டுப் புலியும் வந்துவிட்டது. நில்லாதே” என்று கதவைத் திறக்கச் சென்றாள் மங்கை. அமைதி யாகப் பிரிந்தான் வரிப்புலி.
நிலா அரைவட்ட வடிவத்தில் தோன்றியது. அதன் பாலொளி பட்டு மர நிழல்கள் வேங்கைப் புலிகளாகத் தோன்றின. பழைய மறப் புலியையும், மங்கைப் புலியையும் நினைத்துக்கொண்டே வழிநடந்தான். தொலைவோ தெரியவில்லை, அச்சமும் தோன்ற வில்லை. நேரில் வந்த புலிக்கே அஞ்சாத வரிப்புலி நிழற்புலிக்கு அஞ்சுவானா?
வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த சந்தன மரத்திலிருந்து ஒரு குயில் பாடிக்கொண்டு இருந்தது. வீட்டுக்குள்ளிருந்தும் ஒரு