112
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
பசுக்கன்று கத்திக் கொண்டு இருந்தது. பசுவின் கதறல் ஓங்கிக்கொண்டே சென்றது. “அம்மா” என்று பதிலுக்குக் கதறி அன்பைக் காட்டியது பசு. ஆனால் அவ்வன்பை மங்கை இழந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. முகத்தைத் துடைத்துக் கொண்டு கன்றை அவிழ்த்து விட்டாள். இதற்கு முன்போலல்லாமல் கன்று இன்று மிகுந்த ஆவலோடும் அன்போடும் துள்ளிக் குதித்து ஓடியதையும், தாய்ப்பசுவுடன் விளையாடியதையும் கண்டு கொண்டு தன்னை மறந்து நின்றாள் மங்கை. என்றும் காணாத அளவு அன்றுதான் தாய் சேய் அன்பை அவளால் காண முடிந்தது.
ன்
திரும்பி வீட்டுக்குள் போகப் பார்த்தாள். அங்கே வெளியே போன நம்பி நின்றுகொண்டு இருந்தது என்னவோபோல் இருந்தது. ஆனால் அடக்கிக் கொண்டு வீட்டுக்குள்ளே நடந்தாள். நம்பியின் முகத்திலே பழைய கடுகடுப்பு இல்லாதது மங்கைக்குப் புலனாகாமல் போகவில்லை. வெளிக்கல்லிலே நம்பி உட்கார்ந்திருந்தான்.
வேங்கை மறவன் வந்தான். வரவேற்றுக் கொண்டே, “என்ன வந்து நெடு நேரமாகி விட்டதோ? காட்டுக்குப் போய் விட்டேன்” என்று மன்னிப்பு வேண்டுபவன் போல் பேசி விட்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.
திண்ணையிலே உட்கார்ந்தவுடன் நம்பி சுவரிலிருந்த வரிப்புலியின் சித்திரத்தைச் சுட்டிக்காட்டி “இவனை முன்ன தாகவே அறிவீர்களா? சித்திரம் தீட்டியிருக்கிறீர்களே!” என்றான். “நான் அறியவா? அறிந்திருந்தால் அவனை விட்டு வைத்திருப்பேனா?" என்றான் மறவன். “விட்டு வைக்காமல்' என்று பேச்சை இழுத்தான் நம்பி. “உண்மையைச் சொல்லாமல் இருந்த அந்த முட்டாளை அழைத்து வைத்து நானே தாலி கட்டச் சொல்லியிருப்பேன் என்றான் மறவன். நம்பி குலுங்கக் குலுங்கச் சிரித்தான். சமையல் அறையில் சில முல்லை மலர்கள் அரும்பின! ஆனால் அங்கோ முல்லைக் கொடியைக் காண வில்லை. மங்கை மட்டும் இருந்தாள்.
"நம்பி! உம்மிடம் ஒரு பரிசு கேட்கப் போகின்றேன் தருவீரா?" என்றான் மறவன். என்னிடமா? பரிசா? தரமுடிந்த பரிசாயின் தடையில்லை என்ன பரிசு?' என்று ஆவலோடு கேட்டான் நம்பி.
“மங்கையைப் பிரிந்துவாழ என்னால் முடியாது இவ்வீடும் நிலமும் அவளுக்கே உரியன. உலகில் அவளை அன்றி வேறு
உ