உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ்வளம்

5

இவளது சிந்தை கெடுக; இவள் துணிவு அச்சம் பொருந் தியதாகவுளது; இவள் முதிய மறக்குடியில் பிறந்த மகளாம் எனல் தக்கதே; முன்னாளில் உண்டாகிய போரின் கண் இவளுடைய தந்தையானவன் யானையைக் கொன்று தானும் வீழ்ந்து மாண்டான். நேற்று உண்டாகிய போரின்கண் இவளுடைய கணவன் பெரியவாகிய பசுக்களைக் கவர்ந்து செல்லாவாறு பகைவரைக் குறுக்கிட்டு நின்று போர் செய்து அவ்விடத்தே மாண்டான். இன்றும் போர்ப்பறையைக் கேட்டு விருப்பம் மிக்கு, அறிவு மயங்கி வேலைக் கையிலே தந்து வெள்ளிய ஆடையை எடுத்து விரித்து அரையில் உடுத்தி, உலறிய மயிர் பொருந்திய குடுமியில் எண்ணெயைத் தடவிச் சீவி, இந்த ஒரு மகனை அல்லது இல்லாதவளே ஆயினும் போர்க்களம் நோக்கிச் செல்வாயாக எனச் சொல்லித் தன் மகனை விடுகின்றாள்.)