உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

5 இளங்குமரனார் தமிழ்வளம்

பூக்களையும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான். அந்த அழகுக் காட்சியை நங்கை காணவேண்டும் என்றுதான் வேலைக் காரி உடனே சாத்தனைத் தூக்கிவிடவில்லை.

நங்கை கொடிக்குள் சென்று, முதுகிலே அன்பால் மெத் தெனச் சிறுதட்டுத் தட்டிக் கொண்டு, கன்னத்தைக் கிள்ளாமல் கிள்ளித் தூக்கிக்கொண்டாள். மார்போடு அணைத்துக் கொண்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தாள். மழையும் பெருகக் கொட்டியது.

சாத்தன் சிறு வண்டி ஒன்றை இழுத்துக் கொண்டு தெரு வழியே ஓடினான். அதே வண்டி முன்பு நடை வண்டியாக இருந்தது. அப்பொழுதெல்லாம் வண்டியைத் தள்ளிக் கொண்டு நடக்கப் பழகினான்.

இப்பொழுது நடப்பது மட்டும் அல்லாமல் விரைந்து ஓடவும் கற்றுக் கொண்டுவிட்ட படியால் வண்டியை ஒரு கயிற்றால் கட்டிப் பிடித்துக்கொண்டு ஓடுவான், ஓட்டத்தில் களைப்போ, சளைப்போ சாத்தனுக்கு ஏற்படுவதே இல்லை.

சாத்தனுக்கு ஒத்த வயதினனான பூதன் வண்டி இழுத்துக் கொண்டு வந்தான், 'டே! சாத்தா! எங்கே பார்க்கலாம்! யார் வண்டி முந்தும்?" என்று வெற்றிச் சிரிப்புச் சிரித்தான். சாத்த னுக்குத் தாங்கமுடியவில்லை!” என் வண்டி தான் முந்தும்’ என்றான். “போடா, தற்பெருமை! பார்த்து விடுகிறேன். இப் போது” என்று இறுமாப்போடு பேசினான் பூதன்.

وو

"உம்....! இதோ கோடு; இங்கிருந்து தொடங்கி ஊரை ஒரு சுற்றுச் சுற்றி இங்கே வந்து சேர வேண்டும் தெரிந்ததா?”

"தெரியும், தெரியும்; ஒரு சுற்றாம் சுற்று! போடா! இரண்டு சுற்றுச் சுற்ற வேண்டும்; முடியாவிட்டால் தோற்றுவிட்டேன் என்று ஓடு.

66

66

இரண்டென்ன, மூன்று சுற்று வருவோம்"

“நீ சொல்வதை நான் கேட்கவேண்டுமோ? நான்கு சுற்று” “ஐந்து சுற்று"

66

ஆறு சுற்று”

“ஏழு சுற்று”