140
―
5 இளங்குமரனார் தமிழ்வளம்
பார்க்கவும் முடியாமல் வெட்கத்தோடு நாணிக்கோணி நின்றான். “சாத்தன்! நீ நல்ல சமயத்தில் உதவினாய்” என்றான். ஆனால் அவன் விழுங்கி விழுங்கிப் பேசினான். சண்டைக் காரனுடன் 'வெட்கம் கெட்டுப்போய்' பேசவேண்டுமல்லவா!
“நான் என்ன உதவி செய்து விட்டேன்”, என்று தன்னடக்கத் துடன் கூறிவிட்டு நடக்கத் தொடங்கினான் சாத்தன். “உனக்கு இப்படி ஒன்று ஏற்பட்டிருந்தால் நான் உதவி செய்திருப்பேனோ என்னவோ?” - என்று அரைகுறையாகப் பேசினான் பூதன்.
“சண்டைக் காரனை நாய் கடிக்கட்டும் என்று போயிருப் பாயோ? பூதா! நேர்மைக்காகப் போராடுவதுதான் வீரம்! பகை கருதி இச் சமயத்தில் ஒதுங்கிக் கொண்டு போவது மனிதன் செயல் அன்று. அது இழிவானது. நாய் உன்னைக் கடித்து விட்டால் எனக்கு ஏதேனும் கிடைத்து விடுமா?" என்றான்.
"சாத்தா" என்று வாய்விட்டுக் கதறிக் கொண்டு கட்டித் தழுவினான் பூதன். பகைபட்டுப் பிரிந்தவர் கூடினர். மகிழ்ச்சியை அவர்கள் அகமும் முகமும் காட்டின. சாத்தன், கண்ணால் விடை பெற்றுக்கொண்டு ஆசிரியர் இருக்கும் கொடிப் பந்த லுக்குச் சென்றான்.
பெரிதும் சிறிதுமான யாழ்களை வைத்திருந்த ஒரு கூட்டத் தார் ஆசிரியர் இருந்த இடத்திற்கு வந்தனர். யாழ்மீட்டி கொண்டு பாட்டுப் பாடும் அவர்கள் பாணர் என்று அழைக்கப் படுவர். அவர்களை வரவேற்று; நல்லுரை கூறினார் ஆசிரியர். ஆ அவர்களை ஆசிரியர் முன்பு அறியாதவராக இருந்தாலும் அன்புமிகக் கொண்டு விருந்து செய்வித்தார். அன்று பகலெல் லாம் அங்கேயே தங்கியிருந்து இசைவிருந்தளித்தார்கள். ஏழ்மை நிலைமையில் இருந்த ஆசிரியர் பாணர்களுக்குச் செய்த உதவி களை எண்ணி எண்ணி மகிழ்ச்சி கொண்டான் சாத்தன். ஆசிரியர் செயலையும், பாணர்கள் இசைத் திறமையையும் பாராட்டிக் கொண்டான் சாத்தன்.
66
பாணர்கள் ஆசிரியரிடம் விடைபெற்றுச் சென்றபின், ‘அவர்களுக்கு மிக விருப்பமுடன் விருந்து செய்து அனுப்பியது ஏன்?” என்றான் சாத்தன்.
ஆசிரியர் கூறினார். "சாத்தா! பாணர்கள் பாடுவதையும், இசை மீட்டுவதையுமே தொழிலாகக் கொண்டவர்கள். பிறருக்கு மகிழ்ச்சியான இசை விருந்து அளிப்பதையே தொழிலாகக் கொண்ட இவர்கள், ஊதியம் தரும் வேறு தொழில் எதனையும்