உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

145

மிடமெல்லாம் தேடி ஓடும் பசுவைப் போன்று அறிவு கண்ட L மெல்லாம் ஆவலோடு ஓடிப்பார்க்கும் இயல்புடையவர் தம்மைத் தேடிக்கொண்டு அறிவுக் குவியல் ஒன்று வந்தால் விடுவாரா? சாத்தன் பாடல் கொண்டு வந்து தந்த அன்று வேறு ஒரு வேலையும் செய்யவில்லை. உண்பதையும் மறந்து புதிய பாடலைப் பாடிப்பாடித் திளைத்தார். சாத்தனையும் பாட்டின் பத்தில் ஆழ்த்தினார்.

66

'சாத்தா! விளையாட்டின்பம் ஒன்றே கருதிக்கொண் டிருக்கும் இளமை “கல்லா இளமை” என்று குறிக்கப்படுவதைப் பார்த்தாயா? ஆம்! அது கல்லா இளமைதான்! கற்றறிந்த இளமையோ அறிவையும் பண்பையும் பெருக்குவதற்குத் துடிக்கும். எதிர்கால வாழ்வினை எண்ணி ஏற்றமிக்க கோட் பாடுகளைக் கொண்டு சிறக்கும்.” என்று விளக்கினார் ஆசிரியர். ஆசிரியருக்கு ஏற்ற மாணவனாகச் சாத்தன் ஆராய்ச்சியிலே இன்பங் கொண்டான்.

ஒல்லையூர் கிழார் பெருஞ்செல்வர். அவருக்கு நிகரான செல்வர் அவ்வூரிலே அன்றி அடுத்திருந்த ஊர்களிலும் இல்லை. செல்வப் பெருமை போலவே குணப் பெருமையும் அவரிடம் நிறைந்து விளங்கியது. கிழார், சாத்தனுக்கு நல்வழிகள் காட்டிக் கொண்டே வளர்த்து வந்தார். அதனால் சாத்தன் உரிமை யோடும். மகிழ்ச்சியோடும் விளங்கினான். அவன் பொறுப்பிலேயே வீட்டுச் செயல்களையும் கிழார் விட்டு விட்டார். இதனால் இயல்பிலேயே பெருங்குணம் படைத்திருந்த சாத்தன் மேலும் உயர்ந்த வழிகளிலே சென்று பிறருக்கு உதவியாக வாழ்ந்தான். சாத்தன் புகழ் விரைவில் பரவத் தொடங்கியது. அவனைத் தேடிக்கொண்டு வந்து வறுமையாளர் பலர் வாழ்வு பெற்றனர்; பாவலர்கள் பரிசு பெற்றனர்; இசை வல்லார்கள் ஏற்ற முற்றனர். தன் செல்வத்தைப் பிறருக்குக் கொடுக்க, அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் அடையும் மகிழ்ச்சியைக் காணும் இன்பத்திலே தன் வாழ்நாளைச் செலவிட்டான். அதனால் அவன் “வாழ்வில் இன்பமே அன்றித் துன்பம் இல்லை' " என்னும் நிலையில் உயர்ந்தான்.

ஒரு நாள் குடவாயில் என்னும் ஊரிலிருந்து கீரத்தனார் என்னும் புலவர் ஒல்லையூருக்கு வந்தார். அவர் முன்பே சாத்தனையும் கிழாரையும் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். நல்லவரைக் காண்பதும், நல்லவர் சொற்கேட்பதும், நல்லவர் குணங்கள் உரைப்பதும், அவரோடு இணங்கி இருப்பதும் நன்று