152
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
துடிப்புடைய இளைஞன் ஒருவன் எழுந்தான். ‘உண்மை யான வீரம் இவ்வூரார்க்கு இருந்திருந்தால் போட்டிப்போரில் தோற்றவுடன் “என்ன தண்டனை தருகிறீர்கள்?" என்று கேட் டிருக்க வேண்டும். யாருக்கும் தெரியாமல் ஓடி வந்து விடுவதுதான் வீரமோ? ஏன்! ஓடிவந்து விட்டால் விட்டுவிடு வார்கள் என்ற எண்ணமா? எங்கள் உடம்பிலும் இரத்தம் ஓடு கிறது” என்றான்.
"உங்கள் உடம்பில் மட்டும் என்ன' எல்லார் உடம்பிலும் இரத்தம்தான் ஓடுகிறது” என்று ஒரு மூலையில் இருந்து ஒரு குரல் கேட்டது. மங்கலத்தார் ஒருவர் குரல் அது.
முதலில் பேசிய இளைஞனுக்குச் சீற்றம் பொத்துக் கொண்டு வந்தது. "வெட்கக்கேடு வெட்கக்கேடு; இரத்தம் ஓடுகிறதாம்! நேற்று நாங்கள் கண்டுவிட்டோமே என்ன ஓடுகிறது என்று; சொல்லுக்கு அஞ்சாத சூரப்புலி" என்றான்.
66
'அளந்து பேசு! சாத்தன் வீரன். அவன் வீரத்திற்குத் தலை வணங்குகிறோம். ஆனால் உன்னைப்போன்ற ‘பதர்’ களுக்கு நாங்கள் பணிவு காட்ட வேண்டியது இல்லை. இப்பொழுது வைத்துக் கொள்வோம்; இவர்கள் முன்னிலையிலே வைத்துக் கொள்வோம், வேறு எவரும் வேண்டாம் நீயும் நானும்தான்! போர் தொடங்குவோம்; என்ன சொல்கிறாய்" என்று மங்கலத் தார் கூட்டத்திலிருந்த கிழச் சிங்கம் ஒன்று முழங்கியது.
'சொல்ல ஒன்றும் இல்லை; வந்துபார்!" என்று ஓடி வந்தான் ஒல்லையூர் இளைஞன்.
ஒல்லையூரார் எவரும் பேசவில்லை, இன்னொரு போட்டியா என்று திகைத்துக் கிடந்தனர். கூட்டத்தில் உள்ளூர்க்காரர்களில் நடுவு நிலைமையும் மான உணர்ச்சியும் உள்ள பெரியவர்கள் பலர் இருந்தனர். அவர்கட்கு இப்போட்டி சரியானதாகத் தோன்றவில்லை. அதனால் தம் ஊர்க்காரனைத் தட்டிக் கேட்டுத் தடுத்தனர். அவன் பேசுவது தவறு என்று சுட்டிக்காட்டினர். முதலாவதே தவறு செய்து விட்டதும் அன்றி, ஊர் திரண்டு போருக்குப் போன இடத்திலே தோற்றுப் போய்விட்டு வந்து இன்னும் வீரம் பேசுவது ஆண்மையன்று! ஒல்லையூரார் கூறும் தண்டனையைக் கேட்டு ஒத்துக் கொள்வதே முறை' என்றனர். ஒருவாறு கூட்டம் அமைதியடைந்தது.
وو
“எளிதில் விடக்கூடாது; நல்ல தண்டனை தரவேண்டும்’ என்று ஒல்லையூர் காளைகள் சிலர் குதித்தனர். ஒவ்வொருவரும்