உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பறம்பிற் கோமான் பாரி

ம்

"தேருடன் சென்றார் வேந்தர். தேரைக் காணவில்லை; குதிரை மட்டும் வருகின்றதே! ஒருவேளை குதிரை தேரை விட்டுத் திமிறிக் கொண்டு வந்து விட்டதோ?

66

இருக்கவே இருக்காது! வேந்தரைக் கண்டவுடனே முதுகை நெளித்து வளைத்துக் கொடுத்து நிற்குமே குதிரை. அவர் ஏறிய தேரிலா திமிறும்?

66

அதோ வேந்தரும் வருகின்றார், ஐயோ! கால்நடையாக அல்லவா வருகின்றார். ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. ஆனால் அதை எப்படிக் கேட்டு அறிவது?

"வேண்டாம் வேண்டாம்! வேந்தர் செல்லட்டும். நாம் அவர் வந்த வழியே சென்று பார்த்துத் தெரிந்து கொள்வோம்.

இப்படிப் பலவாறாகப் பேசிக் கொண்டு நகரமக்கள் பலர் அரசர் வந்த வழியிலே சென்றனர். சற்றுத் தொலைவு சென்று, சென்ற எல்லோரும் ஒரு சேரத் திகைத்து நின்றனர். “ஆ ஆ! அரசர் என்ன காரியம் செய்தார்; எவரே இப்படிச் செய்வர்!

66

சாதாரணமாகக் காட்டிலே வளர்ந்தது இம்முல்லைக் கொடி; இக்கொடி படருவதற்காகத் தேரையோ விட்டுச் செல்வர்?

"பூப்போன்ற கால்கள் புழுதிமீது படிய நடந்து செல் கின்றாரே வேந்தர். அவர் இப்பூங்கொடி மீது கொண்ட அருள் தான் என்னே!

“பூங்கொடி எவ்வளவு கொழு கொழு என்று இருக்கின்றது. இதன் தளிர் ஆட்டம் பாம்பு நெளிவையல்லவா நினைவூட்டுகின்றது. காற்றின் தாலாட்டிலே, வண்டின் பாட்டிலே உள்ளம் பறிகொடுத்து முல்லைக் கொடியாள் சிரிப்பது போலவே இருக்கின்றது.” என்ன அழகிய பூக்கள்! என்ன நறுமணம்!

முல்லைப்பூப் போன்ற பற்களையுடைய அழகிய பெண்கள் கலையழகு தவழ அரண்மனையிலே ஆடும் ஆட்டம் கண்டு