184
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
“கட்டிக்குத் தித்தனை வெல்லும் ஆற்றல் இருப்பதனால் தான் எதிர்க்கச் செல்கிறான். அவனொடும் “ஏனோ தானோ” என்று நாமும் படையுடன் சென்று கலந்து கொண்டால் வெற்றி பெற்று விடலாம். துணைக்கு வந்த உதவி கருதி நமக்கும் சோழ நாட்டில் ஒரு பங்கு தருவான். அவ் வளநாட்டினால் நம் நாட்டைச் செல்வம் கொழிக்கச் செய்து விடலாம்.
வெற்றி எவ்வாறாயினும் கூட கட்டிக்குத் துணையாக வேண்டியதும் தேவை ஆகின்றது.அவன் அழைப்பை மறுத்து விட்டால் பின்னர் ஏற்படும் கேட்டினைத் தாங்கிக் கொள்ள முடியாது. இப்படி எண்ணிக்கொண்டு போருக்கு வந்தான் பாணன். ஒப்புக்குப் போனவன் உதவியும் ஊக்கமும் எப்படி இருக்கும்?
கட்டியும், L பாணனும் உறையூரை ஒட்டி ஒட்டி வந்தனர். நள்ளிருளிலேயே உறையூர்க் கோட்டையை வளைத்து விடத் திட்ட மிட்டனர். தித்தன் பெருவீரன் அல்லவா! அதற்கு ஏற்ப அவன் கோட்டைகள் வலியனவாக இருந்தன. கோட்டையைச் சுற்றிலும் காடுகள் செறிந்து இருந்தன. அக்காடுகளைக் கடந்த பின்னர்அகழி உண்டு! காட்டையும் அகழையும் கடந்த பின்பே மதிலை நெருங்க முடியும். காவற் காட்டின் பக்கம் வந்த வுடனேயே கட்டி திட்டமிட்டுக் கொண்டான் தித்தனை வென்றதாக! ஆனால் காவற் காட்டைக் கடந்து, வெளியேறவே “அப்பாடா!” என்று ஆகி விட்டது.
66
ஆழமும், நீளமும் அகலமும் மிக்கதாய்க் கொடுவாய் முதலையும் சுறாவும் கலித்துத் திரியும் அகழைக் கண்டவுடனே ‘அச்சமாக இருந்தது. “ஏனடா வந்தோம்" என்று கட்டி எண்ணிக்கொண்டு இருந்தான். பாணனுக்குத் திரும்பி விட லாமா என்று ஆசை! சொன்னால் கட்டி என்ன சொல்வானோ, செய்வானோ என்று அஞ்சிப் போய் அடங்கிக் கிடந்தான். வீரர்களையெல்லாம் அமைதியாக இருக்குமாறு கையமர்த்திக் கொண்டான் கட்டி; அவர்களும் வேந்தனுக்கு ஏற்ற வீரர்கள்,! 'நமக்கேன் வம்பு' என்று இருக்கும் இடம் தெரியாமல் காட்டுக் குள் பதுங்கிக் கொண்டனர்.
பொழுது விடிந்தது! வெளியேறித் தாக்க வேண்டும்; இல்லையேல் ஓட்டம் பிடிக்க வேண்டும்! தாக்குவது பற்றிய எண்ணம் எப்பொழுதோ தொலைந்து விட்டது. தொலைத் தவை, காடும் அகழும் மதிலும் தான்! ஓடுவதற்கு ஊக்கம் எழுந்தது. ஆனால் மானம் தடுத்துக்கொண்டு நின்றது. அன்றியும்