புறநானூற்றுக் கதைகள்
187
அவையினிடை அரசன் தித்தன் பொலிவுடன் வீற்றிருந் தான். மற்றையோர் அவரவர்க்கென்று இருந்த இருக்கைகளில் ருந்தனர். கிள்ளியும் அரசன் பக்கத்தே அமர்ந்திருந்தான். அவன் எதிர் கால வேந்தன் அல்லவா!
66
அமைச்சர்களே, பெரியோர்களே, இன்று உங்களை ஒரு முக்கிய கடமையை நோக்கி அழைத்து வைத்தோம். அது நம் நாட்டின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒரு செயலாகும்.”
"நம் காவல் காட்டையும், மதில் வலுவையும், அகழ் நிலையையும் கண்டு குடல் கருகி ஓடிய பகைவர்களை நீங்கள் அறிவீர்கள், வலிய காப்பு நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்டு என்னைப் போலவே நீங்களும் மகிழ்வீர்கள் என்பதை அறிவேன். இன்னும் நம் காவலைப் பல வழிகளாலும் பெருக்க வேண்டி யுள்ளது, அவ்வாறு செய்து நம் எதிர்கால மக்களுக்கும் மன்னனுக்கும் நாம் செய்து வைக்கும் தொண்டாக இருக்கும்.' இவ்வாறு கூறிக்கொண்டு இளவரசனைப் புன்முறுவலுடன் நோக்கினான் வேந்தன்.
அவையோர்
இளவரசன் முகத்திலே தித்தன் எதிர்பார்த்த மகிழ்ச்சிக் குறி தெரியவில்லை, சிறிது வெறுப்புக் குறி தான் தெரிந்தது. முகத்திலே அமைதி குடிகொண்டிருந்தது. அவர்கள் முகங்களிலே மகிழ்ச்சியோ, கவலையோ எதுவும் தெரியவில்லை, வேறு வழியாகச் சொன்னால் அவர்கள் முகத் தில் அவர்கள் உள்ளம் தெரியவில்லை.
அரசன் மீண்டும் பேசினான். 'மதிலுக்கு உள்மதில் ஒன்று வேண்டும். மதிற்குள்ளிருந்தே வெளியே இருக்கும் பகைவர்களை அழிக்கும் படைக் கருவிகளை மதிலில் பொருத்தி வைக்க வேண்டும், பல இடங்களில் சுரங்கப் பாதைகளும், கரவு வழி களும் அமைக்க வேண்டும். பகைவர்கள் அறியாமலே அவர் களை முன்னும் பின்னும் வளைத்துக் கொண்டு தாக்குவதற்குத் தக்கவாறு இவற்றை அமைக்க வேண்டும்”.
66
"காவற் காட்டில் புகுந்தோர் வெளியேறித் தப்பிச் செல்லா வண்ணம், துன்புறுத்தும் பொறிகளும், செடி கொடிகளும் அமைக்க வேண்டும். இவற்றிற்கு மக்கள் உதவி தேவை. அதாவது அவர்களிடம். நாட்டுப் பாதுகாப்புக்கு ஆகும் செலவினை வரிப்பணத்துடன் சேர்த்து வாங்க வேண்டும். இந்த செயலை நீங்கள் அனைவரும் வரவேற்பீர்கள்” என்பதை நான் அறிவேன்.
ல