உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

209

சொற்களைத் தலைமேற்கொண்ட சோழன் முற்றுகையை டுகின்றான்; புலவர்களின் உயர் உள்ளங்களைப் போற்றுவதா? புலவர்களின் சொற்படி நடந்த சோழனைப் பாராட்டுவதா? இரு திறத்தவருமே பாராட்டுக்குரியவர்கள் அன்றோ!

கருவூரை முற்றுகையிட்டிருந்த சோழன் கிள்ளிவளவன் என்னும் பெயருடையவன். அவன் உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழநாட்டை நெடுங்காலம் இனிது ஆண்டு வந் தான்; புகழ்வாய்ந்த பண்டைச் சோழன்களுள் அவனும் ஒருவன். சிறந்த வீரமும் நுண்ணிய அறிவும் வாய்ந்தவன். அவன் கோவேந்தனாக விளங்கியதுடன் பாவேந்தனாகவும் இலங்கி னான். அதனால் அறிவரும் அமைச்சரும் புலவரும் எப்பொழு தும் அவன் அவையைச் சிறப்புச் செய்தனர். தன் புலமையாலும் இப்பெரியவர்களின் தொடர்பாலும் நல்லாட்சி செலுத்தினான்.

கிள்ளிவளவன் நாடு வளநாடு என்னும் பெருமைக்குரியது ஆகும். வளநாட்டில் வளத்திற்குக் குறைவு இருக்குமா? காவிரித் தாய் தரும் நீர்வளம் போலவே நெல்வளம் பெருகியது. கோடை யென்றோ, காலம் என்றோ விளைவில் வேற்றுமை இல்லை.

ஒரு பெண் யானை படுக்கும் இடத்திலே விளைந்த நெல் ழு ஆண் யானைகளின் உணவுக்குப் போதுமானதாக இருந் தது. இது என்ன சாதாரணமான வருவாயா? எளிதில் காணக் கூடிய வளமா? வளநாட்டின் பெருமையைக் காட்ட வொன்றே போதும்.

து

வளவன் நாட்டு வயல்களுக்கு வேலியுண்டு; முள்வேலியா? கல்வேலியா? சுவர் வேலியா? - கரும்பு வேலி! வேலிக் கரும்போ பூத்துப் பொலிவுடன் திகழும் காடு, பசுக்கூட்டங்களாய் நிரம்பிக் காணும். காட்டின் இடை இடையே வில்வீரர்கள் உறையும் காவற் கூடங்கள் காணப்படும்.

க லிலே வரும் மரக்கலங்களை மகளிர் விரல்விட்டு எண்ணிக்கொண்டிருப்பர். அவர்கள் தங்கியிருக்கும் சோலையி லுள்ள புன்னை மரத்தைக் கடலலை அசைக்கும். உப்பங்கழிகளிலே ஓடங்கள் மிகுந்து நிற்கும். உப்பு வாணிகர்களின் ஆரவாரம் ஓங்கிக்காணும். வயலுக்கு வயல், காட்டுக்குக் காடு, கடலுக்குக் கடல் ஆகிய வளங்களால் நிரம்பி வழிவது வளவன் நாடு.

வளவன் நாட்டிலே இருக்கும் மக்கள் எப்படி வாழு கிறார்கள்? நெல்லறுப்பவர், கடைமடையிலே வாளை மீனைப் பிடிக்கின்றனர்; தொழியிலே ஆமையைப் பிடிக்கின்றனர்;