212
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
கண்டனர். அவர் கிள்ளிவளவனால் நன்கு மதிக்கப்படும் புலவர் என்பதை அறிவர். அதனால் ஆலத்தூர் கிழார் உரையின் "மெய்மையை" மேலும் உணருமாறு விரும்பினார். கிழாரைச் சிறிது தங்கிச் செல்லுமாறு வேண்டினர். பாணர்களின் உள்ளக் கருத்தைத் தெள்ளிதின் உணர்ந்த கோவூரார் தங்கினார்.
66
பாணர்கள் அவர் மகிழுமாறு பாட்டிசைத்தனர். இன்புற்ற கிழார் பாணர் தலைவனைப் பார்த்து இனிய இசைபாடும் யாழ்ப் பாணனே! சிறிது பொழுது இங்கு தங்கிச் செல்க” என்று கூறினாய். உன் நினைவு யாது? என அறிந்துகொண்டேன். நீர் வளமிக்க திங்கள் தைத் திங்கள் என்பதை அறிவாய். அத் தைத் திங்களில் எவ்வளவு, எவ்வளவு எடுத்தாலும் குறையா நீர்வளம் குளத்தில் இருக்கும் அல்லவா! அக்குளம் போல்வதான ஊர் ஒன்றுண்டு. அவ்வூர் உறையூராம்.
கொள்ளக் கொள்ளக் குறையாச் சோற்றுவளம் உடையது உறையூர்; அவ்வூர் சோறாக்குவதற்கான அடு தீயையே அறியும். பிறரைத் துன்புறுத்தும் ‘சுடு தீ’ யை அறியாது. அங்கே நல்லோன் ஒருவன் உள்ளான். அவன் பெயர் கிள்ளி வளவன் என்பது. அவனைக் காணுவதற்குச் 'செல்வையாயின் செல்வை (செல்வம் உடையவன்) ஆகுவை “ஐயம் இல்லை” என்றார்.
பாணன் மகிழ்ந்து விடைபெற்றுக்கொண்டான். பின், உறையூர் சென்று வளவனைக் கண்டு வறுமையைத் தொலைத்துக் கொண்டான். ‘வறுமைப் பிணி மருத்துவன் வளவன்” என்று வாழ்த்தினான்.
6
வளவன் கலையுள்ளம் கலையுள்ளம் படைத்தவன். அதனால் எப் பொழுதும் கலைவல்லார்களுடனே பொழுதைப் போக்கினான். காவிரி தரும் பொய்யா வளத்தாலும், வளவன் செங்கோல் திறத்தாலும் மக்கள் இனிது வாழ்ந்தனர். பெருகிவரும் நீரில் அலைகள் இருந்தனவே அல்லாமல், மக்கள் நெஞ்சத்தே அலைத் துயர் இருந்தது இல்லை. “புலி தன் குட்டியைக் காப்பது போல வளவன் தன் நாட்டு மக்களைக் காப்பாற்றுகிறான்” என்று பாராட்டிப் பேசினர் மக்கள்.
அரசன் போர்நிலை, கலைநிலை இவற்றை அறிந்து கொண்ட அதிகாரிகள் சிலர், அரசின் பெயரால் ஒவ்வோரிடத்தில் கொடுமை புரியத் தலைப்பட்டான். குறிப்பாக, வெள்ளைக்குடி என்பது சோழன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஓர் ஊர். அவ்வூர் மக்கள் அனைவரும் உழவுத் தொழிலை நம்பி வாழ்பவர்கள்.