உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

இளங்குமரனார் தமிழ்வளம் 5

தேடிவந்து குவிந்தனர். அவன் அவர்கள் பொருள்களைச் சிறக்க வழங்கினான்.

வவ

பண்ணன் சிறுகுடி பசித்தோர்க்கு

ன்புறுமாறு

உணவளிக்கும்

அட்டிற்கூடம் ஆகியது. நோயாளர்க்கு மருந்தளிக்கும் மருத்துவ மனையாகியது; எழுத்தறியார்க்குப் பள்ளிக்கூடம் ஆகியது; கலை நாடுவார்க்குக் கலைக்கூடம் ஆகியது. எல்லார்க்கும் எல்லாம் ஆகியது. பண்ணன் தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் ஆனான்; பசிப்பிணி மருத்துவன் ஆனான்.

பண்ணன் சிறுகுடியைத் தேடிக் கொண்டு வளவன் சென்றான். சிறுகுடி செய்த பெருமை என்னே! பண்ணன் வரவேற்றுப் போகவில்லை வளவன்; தேடிக் காண்டு போகின்றான்; அவன் ஊரை அடுத்துச் சென்றவுடன் ஆரவாரம் எழுவதைக் கேட்டான். இன்னும் சிறிது சென்றான்.

சிறுவர்கள் வரிசை வரிசையாக ஓடி வந்தனர். எப்படி? மழையை எண்ணி முட்டை கொண்டு திட்டை ஏறிச்செல்லும் சிற்றெறும்புக் கூட்டங்களைப்போல ஓடிவந்தனர். பண்ணன் தந்த சோற்றுத்திரளைக் கையிலே! சோறு பெற்ற உவகை உணர்ச்சி உள்ளத்திலே. ஓட்டம் ஓட்டமாக - ஆனால் விலக இடமின்றி வரிசை வரிசையாக வந்தனர்.

ஆ! ஆ! இவ்வழகுக் காட்சி வளவன் உள்ளத்தில் பதிந்து விட்டது. உணர்ச்சி அவனை உந்தித் தள்ளியது. அவ்வுந்துதலிலே பாவலனாக அவன் பாடினான்; யாரை? தன் குடிகளுள் ஒருவ னான பண்ணனை! அவன் சிறு குடியை! சிறுகுடியின் பெரு வளத்தை எப்படி?

“யான் வாழு நாளும் பண்ணன் வாழிய” - இது தான் து சோழன் பண்ணனைப் பற்றிப் பாடிய முதல் வரி. வளவன் வாழ்த்துகின்றான் பண்ணனை; “நெடிது காலம் வாழ்வானாக. யான் நிலவுலகில் எவ்வளவு காலம் வாழ்வோனோ. அவ்வளவு காலத்தையும் அவனே எடுத்துக்கொண்டு வாழ்வானாக!

பேரருள் படைத்த அவ்வள்ளல் தன் வாழ்நாள் மட்டும் வாழ்ந்தால் போதாது; என் வாழ்நாளையும் கொண்டு வாழட் டும்” என்றுரைத்தான்; இது உதட்டிலே இருந்து வெளிவரும் து உரையா?

பெருங்கொடை புரிந்துவரும் வள்ளல் பண்ணனுக்கு உயிர்க்கொடை புரியும் வள்ளலாக அல்லவா சோழன் காணு