உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

5 இளங்குமரனார் தமிழ்வளம்

இருக்கும் பொருட்டுப் பல இடங்களில் அழகிய அரண் மனைகளைக் கட்டியிருந்தான். அவற்றுள் ‘குளமுற்றம்' என்னும் இடத்திலே இருந்த அரண்மனை மிகவும் சிறந்தது. அவ் வரண்மனையிலே தங்கியிருக்கும்போது கிள்ளிவளவன்

இயற்கை எய்தினான்.

66

புலவர்கள் பலர் செய்தியினைக் கேட்டு ஓடி வந்தனர், இரவலர் ஏக்கத்தோடு சூழ்ந்தனர். மன்னவன் மறைவால் நாடு நகரெல்லாங் குளமுற்றத்தில் கூடிக் கசிந்து அழுதது. குளமுற்றம் கண்ணீரால் பெருகி வழிந்தது. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வர மாட்டார் என்பதை எவ்வளவு தெளிவாய் அறிந்திருந்தாலும் "மனம்" அமைதி கொள்வது இல்லையே! அதிலும் ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பைக் கண்ட மக்கள் நிலைமை யாதாகும்?

வளவன் மறைவினைக் கேட்டு வருந்தி வந்தவர்களுள் நப்பசலையார் என்பவரும் ஒருவர். அவர் வளவன் களப்போர்ச் சிறப்பையும், காலன் வாய்ப்பட்டதையும் இணைய எண்ணித் துன்புற்றார். அந்தோ! காலனே! நீ வளவன் உயிரைக் கொண்டாய். ஆனால் உண்மையாகச் சொல்கிறேன். நீ காலன் நீ உருவில் வந்து உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியாது.

66

மனக்கறுவினைக் காட்டிக் கொண்டு கிள்ளியினிடம் வந்திருந்தால் உன்னை மாட்டி வதைத்துத் தொலைத்திருப்பான். வெளிப்பட நின்று நீ அவன் உயிரைக் கொண்டு செல்ல வந் திருந்தால் உன்னை வெட்டி வீழ்த்தியிருப்பான். அவனை மெய் யோடு தீண்டிக்கொண்டு செல்ல வந்திருப்பின் உன்னைக் கையோடு பிணைத்துச் சிதைத்திருப்பான்.

நீ

ஆகையால் இவ்வழிகளால் நீ அவனைக் கொன்றிருக்க முடியாது; இரவலர் புரவலனாய் விளங்கிய அவன் பண்பினை அறிந்து நீயும் ஓர் இரவலன் வடிவிலே வந்து உயிரைப் பரிசாகப் பெற்றிருக்க வேண்டும்” என்று கலக்கமுடன் கண்ணீர்த் துளி களுக்கிடையே பேசினார்.

வளவனுடலுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன் களைச் செய்துமுடித்தனர். அக் காலத்தில், இறந்தவர்களைத் தாழிகளிலே இட்டுப் புதைத்து வைக்கும் வழக்கம் இருந்தது. அத்தாழி ‘முதுமக்கள் தாழி'என்று அழைக்கப் பெற்றது. அத் தாழியிலே வளவன் உடலை வைத்து அடக்கம் செய்தனர். அந்நிகழ்ச்சியைக் கண்டார் ஐயூர் முடவனார் என்னும் புலவர். அவரால் துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.