உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

L

7

சயலைப் பெரிதும் போற்றினர். 'தோழமைக்காகக் கபிலர் ஆற்றிய தொண்டுபோல் எவரே செய்வார்” என்று புகழ்ந்தனர். இப்புகழ் மொழியைக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை கபிலர். விரைந்து சென்று வடக்கு நோக்கி ஓரிடத்தே உட்கார்ந்து உணவு கொள்ளவில்லை.' நீர்பருகவில்லை. “பாரி! என்னோடு எவ்வளவு உயர்ந்த நட்புச் செய்தாய்! எனினும் என்னை விட்டுப் போய் விட்டாயே! இதுவரை உன்னைப் பிரிந்து இருந்தேன். இனியும் அவ்வாறு இருக்க மாட்டேன். நீ சென்ற இடத்திற்கே வந்து சேர்வேன் வேறு பிறப்பு உண்டாயினும் அப்பிறப்பிலும் உன்னை இடைவிடாது இருந்து இன்புற விதி வழிகாட்டுமாக” என்று கூறியிருந்து இறந்தார்.

று

பாரியைப் போல் வள்ளலும் அரியர்! கபிலரைப்போல் தோழரும் அரியர்!” என்று உலகம் பேசுமாறு கபிலரும், பாரியும் ஒன்றுபட்டுவிட்டனர்.கொடைக்காகவே உயிர்வாழ்ந்த பாரியும், கடமைக்காகவே உயிர்வாழ்ந்த கபிலரும் அரியர் அல்லவா! அவர்கள் வழி வாழ்க!