புறநானூற்றுக் கதைகள்
க்
227
‘கம்பு சுழற்றுதல் என்பது ஒரு கலை. ‘சிலம்பம்' என்றும் பயர் பெறும். தற்காப்புக்காக அமைத்துக் கொண்ட பயிற்சிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது இக் கம்பு சுழற்றும் சிலம்பம். கம்பு சுழலும் விரைவில் பிறர் எறியும் சரமாறியான கற்களையும் தடுத்துவிடுகின்றனர்.
சிலர் இரு கைகளிலும் கம்புகளை வைத்துக் கொண்டு ஒன்றை ஒன்று முட்டாமல் - முரணாமல் - நிறுத்தாமல் - நெகிழாமல் கலையழகு தவழச் சுழற்றவும் பழகியிருக்கின்றனர். எல்லோர்க்கும் உரியதாம் பொதுத் திறமையினும் உயர் திறமை பெற்றோரை அத்திறமை கருதிப் பாராட்டுவதும், சிறப்பிப்பதும் இயற்கை. உயர்ந்தோர்க்கு உரியதுதானே புகழ்!
இச்சோழன் வேல் தூக்கிச் சுழற்றுவதிலே தாக்குவதிலே பெரு வீரன். அவனுக்கு வேற்பயிற்சி "விளையாட்டு" ஆக இருந்ததேயன்றி வேலையாக இருந்தது இல்லை. ஒற்றை வேல் சுழற்றும் வீரப்பயிற்சியா கொண்டான் சோழன்? அது அவ் வளவு புகழ் தந்துவிடுமா?
வ
ன்
-
இரண்டு வேல்களை பல வேல்களை ஒரே சமயத்தில் கைகளில் எடுத்துக்கொண்டு “திரிகை" போல் சுழல்வான்! எதிர்த்து வந்தோர் வேல் சுழற்றும் விளையாட்டிலே மெய் மறந்து, விளக்கிடை வீழ்ந்து சாகும் விட்டிற்பூச்சி போலாவர். சோழன் கையும்தான் எத்தகைய கை? குறுகிய கை வேற்பயிற்சிக்குச் சரிப்படுமா? வேற்பயிற்சிக்காகவே நீண்டு வளர்ந்தது போன்ற தடக்கை!
கை
L
-
-
இத்தகு சிறப்புகள் செறியப் பெற்ற வேந்தனை “வாளா” கூறுவரோ? சோழன் வேல் பல் தடக்கைப் பெருவிறற் கிள்ளி என்று கூறிச் சிறப்பித்தனர். (வேல், பல், தட, கை வேற் பஃறடக்கை) தன் பெயரை நினையுந்தோறும், நினையுந்தோறும் நெஞ்சம் விரிய, தோள் நிமிர இருந்தான். இவனும் வீரன்; சேரலாதனும் வீரன். இருவரும் களத்தில் புகுந்தால் எப்படி இருக்கும்? வீரத்தின் உச்சநிலை எதுவோ - அழிவின் கடை நிலை எதுவோ -அதைக் கண்டுதானே தீர்வர்.
சி
சிங்கமும் சிங்கமும் தாக்கினால்...? ஆண்டாலும், ஆண்மை யாலும் ஒத்த சிங்கங்கள் மனஞ் செருக்கிச் செம்மாந்து தாக்கி னால்....? மானம் உடையது வெல்லும். இல்லாதது தோற்கும். ஐயறிவுடைய அவற்றுக்கு இயற்கை மானம் உண்டு; அறிவுடன் கூடிய மானம் இல்லை. சீற்றமும், வெற்றி வேட்கையுமே