230
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
ஈகை போகவில்லை. எடுத்துக்கொள் மாலையை என்று சுட்டிக் காட்டுகிறான். என்னே வள்ளன்மை!
பறை முழக்குவோர் குடியின் வறுமையை நினைந்து வருந்திக் கொடை புரிய விழைகின்றது. வள்ளன்மை யுள்ளம். ஆனால் வாள், வேல் இவற்றைக் கொண்டு வீரத்தின் பெயரால் களத்திலே ஆயிரம் ஆயிரம் உயிர்களை வெட்டி வீழ்த்துகின்றது. வன்மையுள்ளம். தனியொருவன் வாழ்வு பொது வாழ்வின் போக்கைப் பொறுத்தது. அன்றைப் பொது வாழ்வின் அதுவாக இருந்தது. தனி வாழ்வும் அதுவாயிற்று.
சேரலாதன் செயல் அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. போர்க்களத்திற்கு வந்த புலவர் கழாத் தலையார் என்பவரைக் கவர்ந்தது. கழுத்தில் கிடந்த ஆரத்தை "ஆவியோ நிலையில் கலங்கி, ஆக்கை அகத்ததோ புறத்ததோ என்று” அறிய இயலாத இறுதிப் பொழுதிலும் கழற்றிக் கொள்ளுமாறு ஏவும் உயர் நலம் புலவர் உணர்வைத் தட்டி எழுப்பியது. அது ஒரு பாட்டு ஆயிற்று.
வீரர்கள் கூடிப் போர் புரியும் இக்களத்திலே யானைகள் நிறையத் திரியும். வெற்றி கொண்ட வேந்தர் அவற்றைத் தரப் பெறலாம் என வந்தோம். ஆனால் மழை முகிலைத் தடுத்து நிற்கும் மலைபோன்று யானைகள் கிடக்கின்றன, அம்புகளால் தாக்கப்பட்டு, அழகுமிக்க தேர்களைப் பெற்றுப் போகலாம் என விரும்பினோம். ஆனால் அவை விரைவுமிக்க குதிரைகள் இழுத்துத் திரிதலால் சிதைந்து முறிந்து சிதறிப் போய்க் கிடக்கின்றன.
த
வெட்டிக் கத்தரிக்கப் பெற்ற தலையாட்டம் உடைய குதிரைகளைக் கொடுக்கக் கொண்டு செல்லலாம் என்று கருதி னோம். ஆனால் உடலெல்லாம் புண்ணாகி நிலத்திடை வீழ்ந்து காற்றினால் தள்ளப்படாத கப்பல் போல இரத்த வெள்ளத்தில் மிதக்கின்றன. இனியும் பெறுவதற்கு என்ன உளது? பரிசில் பெறாத வறுமையுள்ளத்திற்கு மகிழ்வும் உண்டோ? என்று வருந்துமாறு ஆயது.
உழுது,
போர்க்களத்தையே வயலாக்கி, வாளையே ஏராக்கி காலாட்படையையே வைக்கோலாக்கி மிதிக்கும் உழவனே! யானையின் கால் தடத்தைப் போன்றதாம் 'தடாரி' என்னும் பெயருடைய பறையை அடித்துக்கொண்டு வந்தது உனது திண்ணிய தோளில் பாம்பு சுற்றிக் கிடந்தால் போல் கிடக்கும் ஆரத்தைப் பெறுவோம் என்பதற்காகவோ?" என்று இரக்க மிக்குப் பாடினார்.
ய