உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

241

நாடு நகரங்களில் முரசு ஒலித்தலை இழக்கும். யாழ் இசைத்தலை இழக்கும்; பால் கடைதலை இழக்கும்; வண்டு தேன் எடுத்தலை இழக்கும்! உழவர் தொழிலை மறப்பர்; ஊர் விழா எடுத்தலை இழக்கும் என்று வருந்திக் கூறினார்.

66

வெண்ணி என்னும் அவ்வூரிலே பிறந்து சிறந்த நல்லியல் புலமை மெல்லியலார் ஒருவர் இருந்தார். அவர் குயவர் குடியிலே சிறந்தோங்கியிருந்தால் சீர்மை நோக்கிய சோழ வேந்தன் ‘குயம்” என்னும் தலைமைப்பட்டம் வழங்கினான். அதனால் அவர் வெண்ணிக் குயத்தியார் என்று அழைக்கப்பட்டார். அவர் ஊரில் தானே போர் நடைபெற்றது. அறியமாட்டாரா அவர்?

.

சோழன் தம் நாட்டு வேந்தன்; அவன் பெற்ற வெற்றிக்கு மகிழ்ச்சி கொள்வது இயற்கையே. ஆனால் யாதும் ஊர், யாவரும் கேளிர் என்னும் உயர் வாழ்பினர்க்குத் தம் நாடு வேற்று நாடு, தந்நாட்டு - வேந்தன் பிறநாட்டு வேந்தன் என்னும் இரு வேறுபட்ட எண்ணங்கள் ஏற்படுவது இல்லையே!

இவ்வம்மையார் சோழன் வெற்றியைப் பாராட்டினார். அவ்வெற்றிப்பாட்டின் துன்ப நிலையைச் சுட்டிக் காட்டாமலும் செல்ல விரும்பவில்லை. வெற்றி கண்டு விம்மிதம் உறுவதற்கு வழியில்லை. சுட்டிக் காட்டவும் தவறவில்லை. "உன்னைப் பார்க்கிலும் எவ்வகையிலும் குறைந்தவன் அல்லன் சேரன் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறவும் அயர்ந்தார் அல்லர்.

-

கடலிடைக் கலம் செலுத்திய காவல! களிப்புமிக்க யானைகள் மிக்க கரிகால் வளவ! போரிலே வெற்றி கண்ட புகழாள! உன்னினும் நல்லன் இவன் - வெண்ணிப் போரிலே புகழ் மிகப் பெற்று, புறப் புண்ணுக்கு வெட்கி வடக்கிருக்கும் இவ்வீரன்!” என்றார்.

சேரன் வடக்கிருத்தலை நோக்கி அடக்க முடியாக் கவலைக்கு ஆளாகியிருந்த கரிகாலனுக்கு வெண்ணிக் குயத்தியார் உரை உண்மை என்றே தோன்றியது; இனித் தோன்றி ஆவது என்ன? அழுதாலும் வராது ஆனதற் பின்னே” என்பது பழமொழி.

66

சேரன் வடக்கிருத்தலைக் கேட்டறிந்தனர் ஆன்றோர் சிலர். ஓடோடியும் அவ்விடத்திற்கு வந்தனர். அவர்கள் வாய் பேசியது இல்லை. உணர்ச்சி பொங்கிற்று. சேரன் நிலைமையைக் கண்டு உள்ளம் அடங்கிப் போய்விட்டனர். அவர்களும் வடக்கிருந்தனர். அந்தோ! ஆன்றோர் பலரையும் உடன்