அந்த உணர்வு எங்கே?
253
மாட மாளிகையன் ஒருவன்; கூரைக் குடிசையர் ஒருவர். அண்ணல் யானை, அணிதேர்ப் புரவி, ஆட்பெரும் ஒருவன். ஏடு எழுத்தாணி என வாழும், பாடு தொழிலர் ஒருவர்.
படை
யன்
இரைவேட்டெழுந்த புலிபோலும் இயல்பாளன் ஒருவன். கலைந்தோடும் மான்போலும் தன்மையாளர் ஒருவர்.
செல்வம் செல்வாக்கு, பட்டம் பதவி, பழக்கம் வழக்கம் இவற்றால் அமைந்த இடை வெளி பெரிதாயினும் நட்புரிமை அவற்றை அகற்றி நெஞ்சந் திறக்கும் நெருக்கத்தை அமைத்து விட்டது. இத்தன்மை எதற்கு உண்டு? காதல் நட்புக்கே உண்டு! அந்த உணர்வு எங்கே? எங்கே? என்று அலமர வைக்கிறது இற்றை
உலகம்!
பேர்?
வஞ்சமின்றி நெஞ்சந் திறந்து பழகும் நண்பர் எத்தனை
ஒவ்வொரு கோலம், ஒவ்வொரு நோக்கு, ஒவ்வொரு போக்கு, ஒவ்வோர் எதிர்பார்ப்பு, உள்ளொன்று புறம் பொன்றாம் நடிப்பு, உண்மையில்லாப் பசப்பு என்பனவே நட்புக் கோலம் காட்டி வரும் நாளில்,
‘என் நெஞ்சந் திறப்போர் நிற்காண் குவரே”
என்னும் அந்த உணர்வைத் தேடிக் காண்டலும் உண்டோ? நெஞ்சால் வாழ்ந்த அந்த வாழ்வு எங்கே?
அந்த வாழ்வும் வருமோ?