உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த உணர்வு எங்கே?

269

“நண்பன் பாரிக்குச் செய்ய வேண்டும் கடமைக்காகவே பிரிகின்றேன்.

"இம்மகளிர்க்குரிய மணவாளரைக் கண்டு சேர்ப்பதற் காகவே பிரிகின்றேன்! அழுகையும் அரற்றலுமாகப் பிரிகின் றேன்.”

என நொந்து நொந்து பிரிகின்றார்.

திரும்பித் திரும்பிப்பார்க்கிறார் பறம்புமலையை. நடை ஓடவில்லை, எண்ணம் வாட்டுகின்றது!

பறம்பே இங்கே இருந்து பார்க்கவும் தோன்றுவாய்! ன்னும் சிறிது தொலைவு சென்று பார்க்கவும் தோன்றுவாய்; அப்பால் அப்பால் போனால்? அவனிருந்தான், நீ எங்கும் புகழால் விளங்கினாய் இனி, மற்றை மலைபோல் தான், காணும் அளவுக்குத் தோன்றுவாய்! மன்னன் போன பின்னே என்னே, உன் நிலை இறக்கம்!” என்று வெதும்பினார் (புறம். 109, 113, 114)

பாரி மகளிர்க்கு வாழ்வு தேடி,விச்சிக்கோன் என்பானிடத்துச் சென்றார். பின்னர் பின்னர் இருங்கோவேள் என்பான் இடத்தும் சென்றார். பயன் படவில்லை. பாரி மகளிரைப் பார்ப்பாரிடம் ஒப்படைத்தார்.

அவருள்ளத்தில் பாரியைப் பிரிந்த பின்னர் எழுந்த போராட்டம், ஓய்ந்ததில்லைபோலும். அதனால் அந்நாளின் வழக்கப்படி வடக்கிருந்து உயிர் துறக்கத் துணிந்த செய்தியை அறியமுடிகின்றது. (புறம். 216)

உண்ணாமல் பருகாமல் இருந்து உயிர்விடும் வடக்கிருத் தலையும் பின்னர்த் துறந்து, தீப்பாய்ந்து உயிரை விட்டாரோ என்று எண்ணவும் ஒரு குறிப்புள்ளது.

66

'திருக்கோவலூர்க்குச் சென்று காரியொடும் தொடர்பு கொண்டார். பெண்களை மலையர்க்கு உதவினார் (திருமணம் செய்வித்தார்). பின்னர்த் தம் கடமை முடியவே அக் கோவலூர் அருகில் ஓடும் பெண்ணையாற்றின் இடையே அமைந்த பெரிய கல் ஒன்றில் ஏறி எரி மூட்டி, அதில் பாய்ந்து இறந்தார்” என்பது அது “கபிலக்கல்' என ஆற்றிடையில் ஒரு பாறை. அக்கல்லின் மேல் ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளதையும் அறிகிறோம். கனல் புகும் கபிலக் கல்லது" என்னும் கல்வெட்டுக் குறிப் பொன்றும் இச் செய்திக்குத் துணையாவதையும் தெரிகிறோம் (சாசனக்கவி சரிதம், 5)

66