5. குடிப்பொருள் அன்று
“உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும் ஆமருந்து போல்வாரும் உண்டு"
என்பதொரு வெண்பாட்டு. ஒளவையார் இயற்றிய மூதுரையில் உள்ளது,
உடன்பிறந்தார் சுற்றத்தாராக இருக்க முடியாதா?
உடன் பிறந்தார்க்குள் நெருக்கம் மிகுதி; ஓரிடத்து இருந்து ஓரிடத்து உறைந்து ஒன்றி அமையும் நிலை.
L
உடையும் உணவும் உறவாடலும் ஒன்றிய நிலை
பங்கு பாகம் பணம் பற்று வரவு என ஒட்டிய நிலை.
நெருங்கிப் பார்க்க - உற்றுப்பார்க்கத் தெரியும் ஒட் டடையும் தூசியும் வெடிவும் விரிவும் உதிர்வும் உராய்வும் வீட்டுக்கு வெளியே இருப்பார்க்குத் தெரிவது இல்லை! தெருவிலே இருப்பார்க்கோ, தெரியவே தெரியாது சாலையில் போகின்றவர்க்குச் சாரவே சாராது
நெருக்கத்தில் மனக்கசப்பும் வெறுப்பும் பிணக்கும் பிளவும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டுதான்.
ஒரு குழந்தையின் மேல் பெற்றோர் காட்டும் பற்றுமை மற்றோர் குழந்தைக்கு எரிச்சல் ஏற்படுத்தத்தான் செய்யும்!
வாய்ப்பாக இருந்தாலும் பங்கு என்று வரும்போது விட்டுக் கொடுத்துப்போகத் தன்னலம் விடுவது அருமைதான்!
வீட்டுக்காரன் உள்ளம் உள்ளம் போல் போல் வீட்டுக்கு வந்தவள் உள்ளமும் ஒத்துப்போகின்ற நிலைமையும் அரிதுதான்!
எனினும் சுற்றம் என்பது இல்லாமல் போகுமா? ஒட்டு உறவு பற்று பாசம் என்பவை இல்லாமல் போக வேண்டுமா?