உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

இளங்குமரனார் தமிழ்வளம்

5

அன்றோ! சோழர் குடித் தோல்விக்குச் சோழர் குடியே மார்தட்டி நிற்பதா?

குடிக்குப் பெருமை தரும் செயலா உங்கள் செயல்?

உங்கள் வேண்டாச் செயல், என்ன விளைவை உண்டாக்கும்? உங்களைப் போலும் வேந்தர் உங்கள் செயலைக் கண்டு கைகொட்டி நகைக்கும் நகைப்பையே உண்டாக்கும். குடி கெடுக்கும் செயலில் நீங்கள் அடியிடுதல் வேண்டா” என்றார்.

விளை நிலத்திலே பொழிந்த மழை போல், கோவூர் கிழார் சொல் பயன்பட்டது! போர் ஒழிந்தது!

66

'குடிப் பொருள் அன்றுநும் செய்தி”

என்ற கோவூரார் உணர்வு எத்தகைய மேம்பாடு உடையது!

ஒரு நூறா, இரு நூறா, ஈராயிரம் ஆண்டுகளாகியும் இன்றும் அவ்வுரை நம் பொன்னுரையாக அல்லவோ போற்றிக் கொள்ள வேண்டுவதாக உள்ளது.

ஒரு குடிக்குள், முட்டுதல் மோதுதல் ஒழிந்தனவா? ஒரு குடிப் பெருக்கமாகிய ஓர் இனத்துள், முட்டுதல் மோதுதல் ஒழிந்தனவா?

அங்கேதானே முட்டுதலும் மோதுதலும் மிகுதி!

அங்கேதானே அழிவும் கேடும் மிகுதி!

நமக்குப் பகையாய் நமக்கு அழிப்பாய் நிற்பார் எவர்?

நம்மவர் தாமே அவர்?

66

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள தமிழர் ஒன்றாதல் கண்டே'

என்பது, கோவூர்கிழார் கூறிய குடிப்பொருளை உணர்த்தப் பாவேந்தர் முழங்கிய சங்கமுழக்கமன்றோ!

66

66

குடிகாக்கப் போகிறேன்” என்று, குடியழிப்புச் செய்பவர், 'குடிப் பொருள் அன்றுநும் செய்தி” என்னும் கோவூரார் பொன்மொழியை எண்ணுதல் வேண்டும், அந்நிலையில் குடியழிவு என்பது நீங்கிக் கோலோச்சும் பேறும் தானே உண்டாகும். அந்த உணர்வு எங்கே? எங்கே?