278
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
பட்டறிவும் படிப்பறிவும் முதிர்கின்றன. கட்சியும் காட்சி யும் கவர்கின்றன.
"பிள்ளை நேற்றைப்போல் இல்லை; வீட்டில் தங்குவது
இல்லை;
ஒட்டி உறவாடுவது உறவாடுவது இல்லை; இல்லை; உள்ளம் எங்கேயோ இப்படி இப்படிப் பெற்றோர்கள் எண்ணத்தில்
உள்ளது மின்னல்!
وو
பெற்றோர்களும் பிள்ளைகளாக இருந்து வளர்ந்தவர்கள்
தாமே!
அவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் இடை வெளி இல்லாமலா இருந்தது?
இடைவெளியில் வேண்டுமானால் அளவு வேறுபாடு இருக்கலாமே அன்றி, இடைவெளி இல்லாமலா இருந்தது? அந்நாளில், உரிமை வேட்கை, உணர்வு வெப்பம் அவர் களுக்கு இல்லாமலா இருந்தது?
தம்மினும் தம் மக்களின் இடச் சூழல் வளர்ச்சி மங்கி மடிந்து மட்கியா போனது? புதுப்புதுக் கவர்ச்சிகளும் எண்ணங் களும் உணர்வுகளும் அல்லவா பொங்கிப் பொங்கி வழிகின்றன.
எண்ணிப் பார்த்து இசைத்துக் கொண்டு அதுவும் இசைந்து கொண்டு போகாக் கால் என்ன ஆகும்?
அறியாத் தனம் அடம்பிடித்தால், அறிந்ததனமும் முடம் பிடித்துக் கொண்டு இருப்பதா?
இளமை வீறு காட்டினால், முதுமையும் கூறு போட்டுப் பார்ப்பதா?
இளமை வெட்டிக் கொண்டு போய்விட்டால், கட்டிக் கொண்டும் முட்டிக் கொண்டும் அழ வேண்டியது முதுமைக்கு இல்லையா?
பெற்ற பிள்ளைகளை ஒட்டி வாழ வைக்கவோ, ஒட்டி வாழவோ இயலாத பெற்றவர் தாமா, உலகத்தோடு ஒட்ட ஒழுகப் போகிறார்?