உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

இளங்குமரனார் தமிழ்வளம்

சுடுதல் எதற்கு? சுடர்விடுவதற்கு!

வலி எதற்கு? வலிமை வருவதற்கு!

5

பாலைப்பிரிவு எதற்கு? குறிஞ்சிப் புணர்வு சிறத்தற்கு! ஒருவர் கடிகாரம்போல்,

காட்டுவது இல்லை!

ஒருவர் கடிகாரம்

மணி

ஒருவர் நாடித்துடிப்புப்போல், ஒருவர் நாடித்துடிப்பு

இல்லை!

ஒருவர் நாவின் சுவைபோல், ஒருவர் நாவின் சுவை இல்லை! ஒருவர் நினைவுபோல், ஒருவர் நினைவு எப்படி முற்றாக ஒத்துப் போகும்?

அன்பு.

ஆயினும், ஒத்துப் போகின்றது அன்பு.

நெட்டை குட்டையிலும் நேர்ந்து போகின்றது அன்பு. வறுமையிலும் வளமையிலும்

சைந்து போகின்றது

ஒருவருக்கு ஒருவராகி, இருவரும் ஒருவராகி இசைந்து போகின்றது அன்பு.

66

அந்த அன்பின் வாழ்வே வாழ்வு. அதனால்,

“அன்பின் வழியது உயிர்நிலை”

66

'அன்புற்று அமர்ந்த வழக்கு

"அன்போடு இயைந்த வழக்கு"

66

66

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"

என்னும் வானுயர் வள்ளுவங்கள் கிளர்ந்தன.

அன்பு வாழ்விலே ஏற்றம் இல்லை! இறக்கம் இல்லை! அன்பு புகாவாழ்விலே ஏற்றம் உண்டு; இறக்கமும் உண்டு. ஆனால், அன்பு என்றும் ஒற்றை வழிப்பாதை அன்று; அஃது இரட்டை வழிப்பாதை!