உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த உணர்வு எங்கே?

295

சொன்னாரா? வந்து வழியனுப்பினாரா?” என்றெல்லாம் புகழ் விரும்பிகள் புலம்பிப் புலம்பிப் பட்டியல் இடுதல் நாளும் கேட்கக் கூடியதே.

முன்னெல்லாம் இப்போலிப் புகழ்ம்மை ‘மாமன்’ என்னும் பெயரிலும், ஊர்த்தலைமை நாட்டாண்மை முதன்மைக்காரர் என்னும் பெயரிலும் நிகழ்ந்தன.

மாமன் முதன்மையும் அவன் சார்புடையார் செய்கையும் எந்தவொரு நல்ல நிகழ்ச்சியையும் அல்ல நிகழ்ச்சியாக்காமல் போய்விட்டால் அவன் ஓரளவு பண்பட்ட மாமன் கூட்டம் - என்பது பொருள்.

-

மாமன்

இந்நாளில் மேடை ஏறுவார் மேடை போடுவார் மேடை நடக்க உதவுவார் ஆகிய எல்லாரும் பெரும்பாலும் போலிப் புகழராகப் போய்விட்டமையால், படிப்பாளிகளும் வழிகாட்டி களும் ஆட்சி நடத்திகளும் எப்படியெல்லாம் இழிநிலையில் இருக்கிறார்கள் என்பதை உள்நகையால் நகைப்பாரும், கைகொட்டி நகைப்பாருமாய்ப் பொதுமக்கள் ஆய்விட்டனர்.

அப் பொது மக்களுக்கும் இப்போலிப் புகழ் தொற்று நோயெனப் பற்றிக் கொண்டு சிற்றாட்டம் பேராட்டம் போடலும் காணக் கூடியவாகவே உள்ளன.

“புகழென்ன புகழ்; தேடிப் போவதா புகழ்; தேடிவர வேண்டியது” என்றால், “அது ஒரு தனிப்பிறவி; அது என்றும் திருந்தாது; கடைத்தேறவும் செய்யாது” என்று ஓரங்கட்டலும் ஒதுக்கி விடலும் கண்கூடு.

‘எனக்கு ஒரு பாராட்டு விழா வைக்கக் கூடாதா? எனக்கு ஒரு பட்டமளிப்பு வழங்கக் கூடாதா? எனக்கு மணிவிழா ஏற்பாடு செய்யக் கூடாதா? எனக்கு ஒரு வரவேற்பு வாழ்த்து வைக்கக் கூடாதா?”

என்று தாமே தூண்டி, தாமே ஊரைக் கூட்டி, தாமே மேடைச் செலவும், தமக்குரிய மாலையும் பொன்னாடையும் வாழ்த்தவருவார்க்குரிய போக்கு வரவும் விருந்தும் வேற்றுமாம் எல்லாம் எல்லாம் தாமே ஏற்றுக் கொண்டு, ‘அழைக்கிறோம்' என்பவர்க்குரிய பெயர்க் கொடைக்கும் பெருங்கொடை வழங்கி விழாக்கோலம் கொள்ளும் வேடிக்கைக் காட்சிகளை எண்ணிப் பார்க்கும் எவருக்கும் போலியாகக்கூடப் புகழுக்கு இந்த உலகம் வைத்திருக்கும் பற்றுமை நன்கு விளங்கும்.