உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த உணர்வு எங்கே?

299

திறை கொண்டான் என்று விருதும் கொண்டு ஊரும் கண்ட உரம் எங்கே?

காக்க வேண்டும் தொல்லியல் வரலாற்றுச் சின்னங் களிலும் பாறைகளிலும் கோயில் படிகளிலும் தம் பெயரையும் தம் காதற் கிழமையர் பெயர்களையும் வெட்டியும் எழுதியும் வைக்கும் இறங்கு நிலை எங்கே?

பேருந்து நிறுத்த நிழற்குடைகளும் நிலையங்களும் தொடர் வண்டி நிலையங்களும் ஏன் பள்ளிக்கல்லூரி நீர்க்கூட மலக்கூடங்களும் தாங்கிநிற்கும் கிறுக்கல்களைக் கண்டாலே 'கிறுக்கர் உலகமாகவே போகிவிட்டதா?' என்று எண்ணுவார் எண்ணங்களில் தோன்றாமல் போகாதே!

66

அந்த வாழ்நிலை எங்கே

இந்த வீழ்நிலை எங்கே?

‘எந்நாடோ என நாடும் சொல்லான் யாரீரோ எனப் பேரும் சொல்லான் பிறர் பிறர்கூற வழிக்கேட்டிசினே

நளிமலை நாடன் நள்ளியவன் எனவே"

என்னும் வன்பரணர் கண்ட, புகழையும் விரும்பாப் புகழுலகம் எங்கே? எங்கே என்று வினவும் நாம். “அந்த உணர்வு எங்கே? எங்கே? எனத் தவிக்கிறோம்.