அந்த உணர்வு எங்கே?
303
அவ்விளஞ் சிறார்கள். அச்சிறார்களின் தந்தைக்கும் தனக்கும் உள்ள பகையால் பழிவாங்க முற்பட்ட வேந்தனின் கொடுஞ் செயலை எண்ணிக் குமையும் அளவில் நில்லாமல், ஏவும் வேந்தன் முன்னே சென்று நின் செயல் அறத்தொடும் அருளொடும் குடித்தகவொடும் இறையாண்மையொடும் கூடியது அன்று என்று எடுத்து உரைத்து உய்யக் கொள்கிறார் ஒருபுலவர்.
வி
அதிகாரம் வந்து விட்டால் தலைக்கனம் இயல்பாக ஏறும்; ஏறவும் தன்னலக் கூட்டம் செய்துவிடும். நெருக்கடிகளும் சார்புகளும் நிலைக்கச் செய்யும் அந்நிலையில் ஆய்ந்து முடிவெடுத்து அறங்காணும் செம்மையும் மட்டுப்படும். இயல் பான நல்லவனுக்கே இந்நிலைகள் உண்டு எனின், அல்லவன் ஆட்சிக்கு உரியவனாக இருந்துவிடின் என்னாம் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை!
வெற்றி வேற்கை என்பதொரு நூல். கடைக் காலப் பாண்டியருள் ஒருவனான அதிவீர ராமபாண்டியன் பாடியது அந்நூல். அதில்,
66
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்"
என்கிறான்.
அறிவுடையவனை அரசன் விரும்புதல் ஒரு நிலை. விரும்பலாம்; பாராட்டலாம் மதித்துப் போற்றலாம், நல்லுரை கேட்கலாம்; அளவளாவலாம்..அவ்வளவே அறிவுடையவனால் உலகம் எய்தும் பயனோ?
சங்க நாளிலே இருந்த ஒரு பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன். அவன் அறிஞன் அறிவினை மதித்தவன்; அறிஞர் வழி நின்றவன் என்பது அவன் பாடிய புறப்பாடல் ஒன்றால் புலப்படுகின்றது.
66
அவன்.
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” என்கிறான்
கட்டடம் கட்டுவதற்கு வரைபடம் போட்டுத் தருகின்றார்
ஒருவர்.
வரைபடத்திற்குத் தக்க கட்டடம் எழுப்புகிறார் கொற்றர்.