உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த உணர்வு எங்கே?

305

களும் அக்குழுவின் கருத்துக்கு மதிப்புத் தந்து நடத்தல் வேண்டும். ஏறத்தாழ ‘துறைவாரி முறை மன்றம்' போலவே அவை இயலல் வேண்டும். அரசு ஏற்றுச் செய்யுமா?

அறம் விரும்பும் அரசு எனின், மக்கள் நலம் நாடும் அரசு எனின், கையில் கறையும் நெஞ்சில் குறையும் இல்லா அரசு எனின் இதனை வரவேற்றுச் செயல்படுதலில் முந்து நிற்கும் சருக்கும் சிறுமையுமே ஆட்சி எனக் கொண்ட ஆட்சி எனின் இதனைச் சிந்திக்கவும் கருதாது.

தன்னலப் பார்வை, அது தவிர்ந்தால் கட்சிப் பார்வை என்று பார்த்து நடத்துதலே முறைமை என்று கொண்டு விட்டதால், அறிவுப் பார்வையும் தொண்டுப் பார்வையும் பரிசு பாராட்டுப் பார்வையும் எல்லாம் எல்லாம் அப்படியே ஆய்விட்ட பின்னர்ப் பதவிப் பார்வையும் பொருட்பார்வையும் தாமா பொதுமைப் பார்வையாய் அமையும்?

66

தான் ஆட்சியாளனாக இருந்தும்,

"அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்”

என்று நெறிமுறை கண்டு பாடலாகப் பறையறைந்த அப் பாண்டிப் பெருமகன் உணர்வு எங்கே? இந்நாளை ஆள்வோர் உணர்வு எங்கே? அந்த உணர்வும் உண்டோ? உண்டோ? என்று ஏங்கவே வேண்டியுள்ளது.