உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த உணர்வு எங்கே?

309

இருவரும் எளியவர் அல்லர் எளிமையர் அல்லர்! முடி

வேந்தர்.

அவருக்கு வியப்பினும் வியப்பாயிற்று.

ஏனெனில் இந்த மண்ணில் ஆட்சி செய்பவர் இருவர் இணைந்து ஒருமுகமாகக் காட்சி தரும் மாட்சி என்பது எளிதாகக் காணக் கூடியதா?

தமிழர் வரலாற்றுப் பேழையாகத் திகழும் புறநானூற்று நானூறு பாடல்களிலே இரண்டே பாடல்களில்தானே இருவர் வேந்தரும், மூவர் வேந்தரும் கூடியிருந்து காட்சி தந்து உள்ளனர்! ஒருவழியர்,ஆளும்

குடியால் ஒருவழியர், மொழியால் ஒருவழியர், ஆளும் அவர்கள் போலவே வாழும் மக்களும் ஒரு மொழியர். கொண்டு கொடுத்தலும் அவர்களுக்குள் உண்டு. என்றாலும் ஒன்றுபட்டு நின்ற காட்சி அருமை ஆயிற்று! அவ்வருமைக் காட்சி இரண்டுள் ஒன்றே இவ்விருவர் இணைந்திருந்த காட்சி.

ஒருவன், பெருந்திருமாவளவன்,

ஒருவன், பெருவழுதி.

முன்னவன் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் என்றும், பின்னவன் பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்றும் வழங்கப்படுவர்.

இவர்கள் இணைந்திருத்தலை இன்புறக்கண்டு களித்தவர், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பார். காணாத காட்சியைக் கண்டுவிட்ட களிப்பு விஞ்சி விட்டது

போலும்!

சிலர் அழகாகப் பாடினால் ‘ஆ! ஆ! இன்னொரு முறை'

என்பர்.

சில படங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டால் திரும்பித் திரும்பி அங்கு நின்றும் இங்கு நின்றும் பார்க்க ஏவும்.

நல்ல அரிய தோற்றம் அமையும் என்றால் 'அருள் கூர்ந்து ன்னொரு படம்' என ஒளிப்படம் எடுப்பவர் கூறுவர்.

காரிக்கண்ணனார் வியப்பிலே

"இன்றே போல்கநும் புணர்ச்சி”