உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. தீதும் நன்றும்

“கெடுத்துவிட்டான்.

வேண்டுமென்றே கெடுத்துவிட்டான். திட்டமிட்டே கெடுத்துவிட்டான்”

என்கின்றனர்.

ஒருவன் வேண்டுமென்று திட்டமிட்டுக் கெடுக்க வேண்டு மானால், அவரால் அவனுக்கு ஏதோ ஒன்று நேர்ந்திருக்க வேண்டுமே அவனைப் புண்படுத்தியோ பொருளைக் கெடுத்தோ புகழைத் கெடுத்தோ போட்டியாக்கியோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டுமே!

அப்படி ஒன்று நிகழவில்லை என்றால், அவன் கெடுக்க எண்ணும் போதே, நீ தவறாக நினைக்கிறாய், உண்மை இது என வெளிப்படுத்தி வழிப்படுத்தியிருக்க வேண்டுமே!

அறியாத்தனத்தில் ஆளுக்கு ஆள் சரி என்ற நிலையில் உள்ளவர்களிடத்து மட்டும்தானா இத்தகு அவலக்குரல்கள் கேட்கின்றன?

அறிவாளர்களும் கூறுகின்றனர்; பெரும்பதவியாளர்களும் கூறுகின்றனர் அரசியலாளர்களும் பொருட்பெருக்கர்களும் கூறுகின்றனர். கேடன் கெடுத்தான் என்றால் உம் அறிவும் திறமும் என்ன ஆனது? அதை, எண்ணிப் பார்த்தாலே உள்ளே நோக்க வழி பிறந்து விடுமே!

‘அம்மா அவன் அடித்து விட்டான்' என்று ஓடிவந்து ஓ ஓ என்று அழுகிறான், ஒரு சிறுவன்.

அழுகையால் அம்மா அரவணைப்பை எளிதில் பெற்று விடலாம்; அழுகையால் எதனையும் எளிமையாய் முடித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை அச்சிறுவனுக்கு இருக்கிறது.