314
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
குற்றம் செய்து செய்து தடிப்பேறிய பின்னர் குற்றம் குற்றமாகத் தோன்றுமா? குணமாக அல்லவோ தோன்றும்! அதற்கு மாறான நல்லவை அல்லவோ, குற்றமாகத் தோன்றத் தொடங்கிவிடும். அந்நிலையிலேதான் பிறர் செய்த நன்மையும், குற்றமே வாழ்வானவனுக்குக் குற்றமாகத்தோன்றிப் பழிபாவஞ் செய்யவும் தூண்டி கொண்டுதான்.
விடுகின்றது.
“நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை'
அந்நிலைமையை
என்னும் மணிக்குறளைத் திருவள்ளுவர் தந்தார்.
உட்
எனக்கு வரும் தீமையெல்லாம் என்னால் வாராமல், பிறரால் வருவதாகவே எண்ணிவிட்டால் அதன் முடிவு. பிறர் செய்யும் நன்மையையும் தீமையாகவே முடிவெடுக்கும் குறை பாட்டுக்கு வழி வகுத்து விடும் என்பது திட்டவட்டமான செய்தி. இனித் தீமைதான் என்பது இல்லை; நன்மையையும் பிறர் தருவதாக எண்ணுவதும் மெய்யில்லையாம். நானே என் தீமைக்குக் காரணமானவன் போல், என் நன்மைக்கும் நானே காரணமானவன் என்று தெளிதல் வேண்டும். இல்லாக்கால் நன்மை என்பதும் நன்மையாய் அமையாமல் ஒழிந்து போதல் உறுதி.
மக்கள் இருவர் என்றால், இருவர்க்கும் ஒத்த கல்வி, ஒத்த வாய்ப்பு, ஒத்த செல்வம் என்றே பெற்றோர் தருகின்றனர். அவர்கள் பெற்ற மனம், சற்றும் ஏற்றம் இறக்கம் காட்டுதலோ 'ஒருவன் வாழ வேண்டும். ஒருவன் தாழ வேண்டும்' என்று எண்ணுதலோ இல்லை. ஆனால், இருவருள் ஒருவன் வாழவும், ஒருவன் தாழவும் செய்தால், அதற்கு அப்பெற்றோர் பொறுப் பாளரா, அப்பிள்ளைகள் பொறுப்பாளரா? வாழ்வும் தாழ்வும்
பிள்ளைகளைத்தானே சாரும்!
வறுமையர் இருவர்: ஓர் அறநிறுவனம் அவர்கள் வறுமையைக் கருதித் தொழில் செய்து பிழைப்பதற்காக ஒரு தொகையை வழங்குகின்றது. அது நன்மை செய்ததா? தீமை செய்ததா?
அத்தொகையை வாங்கியவருள் ஒருவன் அத்தொகை உள்ளவரை வெறியேறக் குடித்தான்; வெறிதீரும் வரை மனைவி