334
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
தவறினால் உண்டு ஏப்பமிடும் விலங்குகள் உறுமித் திரிந்தன. வளைந்து செல்லும் பாதைதான் என்றாலும் நெளிந்து செல்லும் பாம்புகளுக்குக் குறைவு இல்லை. ஆந்தையின் அலறலும், கூகையின் குழறலும் கேட்டுக் கொண்டே இருந்தன. நட்டு, ஏற்றமாக ஓரிடம் ஏறும்; செங்குத்து இறக்கமாக ஓரிடம் இறங்கும்; அடியடி தோறும் ஏறி இறங்க மூச்சு முட்டும்; நடையோடாது கால்கள் நடுங்கும்; உணர்வு ஒடுங்கும்.
நடைத்துயர்
சித்திரனார் கால்களோ மென்மையானவை. உள்ளத்தில் உரம் இருந்தாலும் உடல் உரமும் வேண்டுமல்லவா! நடப்ப தற்குத் திண்டாடினார்; நிழல் கண்ட இடங்களிலெல்லாம் நின்று நின்று சென்றார்; வானுயர்ந்த மலைகள் செலவைத் தடுத்தன! வறுமை பிடர்பிடித்துப் ‘போ போ” என்று முன்னே தள்ளியது. இறுதியில் வறுமையே வென்றது. ஒருமலையா ருமலையா? பலபல! அத்தனையும் கடந்து தகடூர் போய்ச் சேர்ந்தார்.
சித்திரனார் சென்ற காலநிலை
புலவர் வருகை கேட்டுப் பொருக்கென ஓடி வரும் அதியமான் அரண்மனையிலேதான் இருந்தான்; இருந்தாலும் புலவர் சித்திரனார் வருகையை அறிந்தும் வரவேற்க வந்தான் இல்லை. அவ்வையின் புலமையைப் பயன்படுத்திக் கொண்டு. பண்பையும் புகழையும் வளர்த்துக் கொண்ட அதியமான் புலவரை வரவேற்க வரவில்லை. அவனுக்கோ அரசியல் அலுவல் மிகுதியாயிற்று! "போர் போர்” என்று வீரமுரசு கொட்டித் திரிந்த அவனுக்குப் பகைவர்கள் பெருகிவிட்டனர். பலர் பலராகச் சேர்ந்து கொண்டு தக்க பொழுதில் தாக்கி அவனை அழிக்க முனைந்து நின்றனர் ‘அயர்ந்திருந்தால் போதும், அடுத்த நொடியில் அழிவே” என்னும் சிக்கலான பொழுதிலே தான் அதியமானிடம் சித்திரனார் போய்ச் சேர்ந்தார்.
66
புலவர் வருகை கேட்டு மகிழ்வுற்றான் அதியமான். அவரை நேரடியாகக் கண்டு வரவேற்றிருக்கலாம். நற்சொல் கூறி யிருக்கலாம்! அவர் பொன்னுரைகளைச் செவியேற்றிருக்கலாம்! ஆனால் நெருக்கடியிலே தவறி விட்டான். சித்திரனாரைக் காணாமலே தக்கவர்கள் வழியாகப் பரிசுப் பொருள் அனுப்பி வைத்தான்.