உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

இளங்குமரனார் தமிழ்வளம்

5

அலற கப்பல் கடலுள் ஆழ்ந்தது; அக்கப்பலின் மூலையிலே ஒருவன் உட்கார்ந்து கொண்டிருந்தான். உட்கார்ந்து கொண்டிருந்தவனோ ஊமன்; அன்றியும் கண்ணொளியும் இல்லாதவன்; அவனும் கப்பலிலிருந்து எப்படியோ கடலில் தப்பி விழுந்து விட்டான்.

ஒடிந்த கட்டையைப் பற்றிக் கொண்டு தப்பிச் சென்ற வர்கள் உண்டு; கட்டையை ஒடித்துப் பற்றிக் கொண்டு போன வர்கள் உண்டு; நான்கு பேர் மூன்று பேராகச் சேர்ந்து கிடைத்த கட்டையில் ஏறிக்கொண்டு சென்றவர்கள் உண்டு; மீனவர் படகிலும், வணிகர் கப்பலிலும், கட்டுமரங்களிலும் ஏறிக் காண்டு கடல் கடந்தவர்கள் உண்டு; ஆனால், அந்தக் குருடனோ? என் செய்வான்?

எந்தக் கட்டையை எடுப்பான்? எதை ஒடிப்பான்? எப்படித் தப்புவான்? உணர்வு அற்றகட்டை அவன் தனது உயிர் தப்பிப் பிழைக்குமாறு தானே முன்வந்து நிற்குமா? அப்படியே முன்வந்து நின்றாலும், அது கையிலும் தட்டவல்லவா வேண்டும்? ஓரடி தூரம் ஒதுங்கி நின்றாலுங் கூட அதனை அறியுமாறு அவனுக்குக் கண்ணொளி இல்லை இல்லையே! அன்றியும் அவன்மேல் இரக்க முடையார் எவரேனும் இருந்து தம் கட்டையில் ஏறிக் கொள்ளு மாறு அழைத்தாலும் அவர்கள் அழைப்பைக் கேட்டறிய ப முடியாத செவிடனாக அல்லவா இருக்கிறான்?

மற்ற எவரேனும் நெருங்கி வந்து அதனைக் கண்டுபிடித்துக் காப்பாற்றலாம். என்றாலோ, அதற்கு வாய்ப்பற்ற மழைக்காலத்து நள்ளிருட்டு ஆயிற்றே! தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே வழிதுறை அறியாமல் தத்தளிக்கும் நிலையினராக இருக்கும் அவர்கள் கண்கெட்ட ஊமனை நினைத்துக் கண்டு பிடித்துக் காக்கவா போகின்றார்கள்! அவன் கதறல் - ஊமை உளறல் - பிறர் காதுக்குக் கேட்கும்படியாகவா காற்றும் அலையும் முழங்கு கின்றன? அப்படியானால் ‘கண்ணில் ஊமன்' நிலை என்ன வாகும்? 6

என்னவாகும்? கடலில் மூழ்கி மடிவதுதான் முடிவு. இது தவிர்த்து வேறு வழியேது? வகையேது? இக்கண்ணில் ஊமனது கடற் பயணம் போலவே எனது வாழ்வுப் பயணமும் உள்ளது.

வறுமைக்கு ஆட்பட்ட நான், வள்ளல்களையும் இழந்து தவிக்கிறேன். என் வாழ்வோ தப்பிச் செல்ல முடியாத அவ்வளவு