பெரும் புலவர் மூவர்
உலகுக்கோர் உயர்கொடை
349
சித்திரனார் வறுமைச் சூழலிலே பிறந்தார். அச் சூழலிலே வளர்ந்தார்; ஆயினும் பொருள் பெறுவது ஒன்றே குறியாகக் கொண்டு மான உணர்வை மறந்து விடவில்லை. மனிதனுக்கு வ இன்றியமையாத மானத்தை உயிர் தந்தும் காக்கவேண்டிய மானத்தை எந்தச் சமயத்திலும் எந்த இடத்திலும் காத்தே வந்தார். நாடாளும் வேந்தனாக இருந்தாலும் கேடு சூழும் பண்பினனாக இருந்தால் தக்கமுறையில் எடுத்துக் காட்டி டித்துக் கூறத் தவறியதும் இல்லை அவ்வாறு இடித்துக் கூறிய பொழுதும் அவர்கள் பட்டுத் திருந்த வேண்டும் என்று கருதி னாரே யன்றிக் கெட்டழிய வேண்டும் என்று கருதினார் அல்லர். தகுதியறிந்து கொடுக்காத வேந்தனை இடித்து உரைப்பதே அன்றி, அறிவு வருமாறு தாமே முன்வந்து பரிசு தந்து நாணவைக்கும் நற்பண்பு சித்திரனார் இவ்வுலகுக்குத் தந்த உயர் கொடையாகும்.
சித்திரனார் நாகரிகம்
தம்மொத்த புலவர்களைப் பெரிதும் மதிக்கும் பெருங் குணம் படைத்தவர் சித்திரனார். பெண்மையின் பிறப்பான மனைவியையும், மழலையையும் மக்களையும் பெற்றிருந்த இவர் ஈத்துவக்கும் இன்பத்தில் தலை நின்றார். பெற்றெடுத்த அன்னையைப் பேணுவதில் பெரும் அக்கறை செலுத்தினார்! சித்திரனார் போலி நாகரிகத்திற்கு ஆட்பட்டவரல்லர்! நெஞ்சத்தே தோன்றும் உண்மை நாகரிகத்திற்கு உறைவிடம் ஆக இலங்கியவர்! அவர் நாகரிகம் உலகைக் காப்பதாக! உணர்வு ஊட்டுவதாக.