ஆவூர் மூலங்கிழார்.
பெரும் புலவர் மூவர்
351
இத்தைகய நாட்டில் காவிரிக் கரையில் ஆவூர் என்னும் அழகியதோர் ஊர் இருந்தது. அவ்வூர் பொருட்செல்வத்தாலும் பொலிந்து விளங்கிற்று இவ்வூரினர் பெரும்பாலும் உழவுத் தொழிலே பார்த்து வந்தனர். ஆதலால் இவர்கள் கிழார் என்னும் பெயரால் அழைக்கப் பெற்றனர். 'கிழார்' என்னும் சொல்லுக்கு உரிமையாளர் என்பது பொருளாம். நில உரிமை பெற்று வாழ்ந்தவர்களே கிழார் ஆயினர். இக்கிழார்களுள் மூல நாண்மீனில் பிறந்து புலவராய் விளங்கிய பெருமகனார். ஒருவர் ஆவூர் மூலங்கிழார் என்னும் பெயரால் அழைக்கப் பெற்றார். ஆவூர் மூலம் என்பது ஊரின் பெயர் என்றும், அதில் பிறந்து, வேளாண் தொழில் புரிந்த இவர் ‘ஆவூர் மூலங்கிழார்' என்று அழைக்கப்பெற்றார் என்றும் கூறுவது உண்டு.
சாத்தன்
ஆவூர் மூலங்கிழார் இளமையிலேயே கற்பன கற்றுக் கவிபாடும் திறம்பெற்றார். கற்புடையவரான மங்கை ஒருவரை மணம் செய்து கொண்டு இனிய முறையில் இல்லறம் நடத்தினார். இவரது இல்லறத்தின் பயனாக ஒரு புதல்வர் தோன்றினார். புதல்வரைக் கண்ட பெற்றோர் பெரிதும் மகிழ்ந்தனர். தாம் வழிபடு தெய்வமான சாத்தன் என்னும் தெய்வத்தின் திருப் பெயரையே தம் மைந்தர்க்கும் இட்டனர்; அதுமுதல் குழந்தை சாத்தன் என்னும் பெயரால் அழைக்கப் பெற்றது.
கவிபாடும் ஆற்றல்
“சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை” ஆதலாலும், கற்றோர் கூடிய அவையிலே மைந்தனை முதல்வனாக இருக்கச் செய்வது தந்தையின் தலையாய செயல் ஆதலாலும் மூலங் ழார் சாத்தனாரை உரிய காலத்தே பள்ளிக்கு அனுப்பி வைத்தார். தாமே ஆசிரியராக இருந்தும் மைந்தர்க்குக் கற்பித்தார். இயற்கையாகவே நுண்ணறிவும் தெளிந்த புலமையும் உடையவரான சாத்தனார் பள்ளிப் படிப்பாலும், தந்தையின் உதவியாலும் கல்வியில் தலைசிறந்து விளங்கினார். தந்தையைப் போலவே கவிபாடும் ஆற்றலும் பெற்றார்.
·
பண்பட்ட உள்ளம்
சாத்தனாரின் தந்தையார் உழவுத் தொழில் பார்ப்பவராக இருந்தாலும், அவரது செலவுக்குத் தகுமாறு வருவாய் வர