பெரும் புலவர் மூவர்
வறுமை தந்த வளம்
363
சாத்தனார் என் செய்வார்? புலமை அவரிடம் இருக்கிறது; வாழுவதற்குப் புகல் இல்லையே! போன போன இடங்களி லெல்லாம் அவலநிலை சூழ்ந்து கொண்டு வருவதைக் கண்ட புலவர் உள்ளம் புண்பட்டுப் போயிற்று. அந்த மெல்லிய உள்ளம் எப்படித் தான் பொறுத்துக் கொண்டதோ! ஐயகோ! இது புலமையால் வந்த வறுமைதான்! புலமையில்லாதவராக இருந் திருந்தால் நெஞ்சத்தை விரிவாக்கியிருக்கமாட்டார். குறுகிய அளவிலே நின்று பெருகிய செல்வம் சேர்த்துவைத்திருப்பார்! தந்நலமே குறியெனக் கொண்டு பொழுதைப் போக்கியிருப்பார்! ஆனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரது புகழைப் பேசும்படியான கவிச் செல்வங்களைப் படைத்திருக்க மாட்டார்! இது வறுமை தந்த செல்வமேயாகும். வாழ்க வறுமைச் செல்வம்!
முதிரத்தில் குமணன்
புலவர் சாத்தனார் வீட்டுக்குத் திரும்ப நினைக்காதவராய் வேறு வேறு எண்ணித் துடித்தார். வெறுங்கையினராய்ப் போவதைப் பார்க்கிலும் வீட்டுப் பக்கமே போகாதிருத்தல் நல்லது என்ற முடிவுக்கு வந்தார். அப்போது அவருள்ளத்தே ஓர் எண்ணம் ஒளிவிடலாயிற்று. அஃது என்ன வெனில் "இரப்பவரை எல்லாம் ஏற்றுப் போற்றுதலைக் கடப்பாடாகக் கொண்ட வள்ளல் குமணன் என்பான் உள்ளான்” என்பதேயாகும். முதிர மலைத் தலைவனான வள்ளல் குமணனைப் பற்றியும், அவனைப் பெருஞ்சித்திரனார் பாடிப் பரிசு பெற்றது. பற்றியும் முன்னரே அறிந்துள்ளோம். அத்தகைய குமணனை அடைந்தேனும் குடும்ப நிலைமையைக் கூறிப் பொருள் பெறலாம் எனக் கருதினார் புலவர்.
பெற்றோர் இன்பம்
குமணனின் குண நலன்களைக் கேள்விப்பட்டுக் கொண்டும், நாட்டு வளத்தைப் பார்த்து அனுபவித்துக் கொண்டும், பெரு வியப்புடையவராய்ப் புலவர் சாத்தனார் முதிரமலையைச் சேர்ந்தார். அரசனைக் கண்டு மகிழும் பெருநோக்குடன் அரண் மனையை அடைந்தார்! ஆனால் பாவம்!
சாத்தனார் தமது நெஞ்சம் வெடித்து விடுவது போன்றதான பேருணர்ச்சிக்கு ஆட்பட்டார். ஆம்! அவர் எதிர்பார்த்து வந்த -