உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் புலவர் மூவர்

371

இருந்தார்; உள்ளக் கடல் கொந்தளிப்புக் கொண்டது! எரிமலைக் குழம்பாகவும் மாறியது! ஆனால் வெளியே ‘கக்கி” விடவில்லை. உடன் பிறந்த இவர்களின் மாறுபாட்டைப் போக்கி ஒன்றுபடுத்தியே யாவேன்: இது என் கடன்” என்று உறுதி கொண்டார். குமணன் கையில் வாள் இருப்பது கொடுமை யானது என்பதையும் உணர்ந்தார். இன்னா செய்தலில் வல்ல இளங்குமணன் எவனோ ஒருவனைப் புலவனாகப் போகச் செய்து அண்ணன் தலையை வாங்க முயன்றாலும் முயலலாம். வஞ்சம் சூது அறியாத குமணன் போலிப்புலவனிடம் வாளைத் தந்து தலையைக் கொய்து கொள்ளச் சொன்னாலும் சொல்லலாம் என்று எண்ணினார். அதனால் அவன் தந்த வாளினை மறுத் துரைக்காமல் மலர்க் கையால் வாங்கிக் கொண்டார் புலவர். அன்பின் வழி

"தலையை வெட்டிக் கொள்க' என்று குனிந்தான் குமணன். சற்று நேரம் சென்றும் தனக்கு ஒன்றும் நேராது இருப்பதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தான். ஆனால் புலவரைப் பக்கத்தில் காணவில்லை. எழுச்சி மிக்கக் குதிரையின் விரைவிலே சாத்தனார் தொலைதூரத்தில் போய்க் கொண்டிருந்தார். குமணன் தனது கண்ணுக்குத் தோன்றும் அளவும் புலவரை நோக்கிக் கொண்டே

ருந்தான். சாத்தனார் தம் குடும்பக் கவலையை மறக்கும் நிலைமையை அடைந்துவிட்டார். ஆனால் குமணனோ அவர் குடும்ப நிலைமைக்காக அவரினும் ஆயிரம் ஆயிரம் மடங்காகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். அன்பின் வழியது தானே உயிர் நிலை.

உடன்பிறப்பின் உணர்ச்சி

சாத்தனார் காட்டிலிருந்து இளங்குமணன் இருக்கும் அரண்மனையை அடுத்தார்! காலம் நோக்கினார்; தக்க சமயம் இதுவே என்றறிந்து வாளும் கையுமாய் உள்ளே போனார். வீறாப்போடு வரும் புலவரைக் கண்டான் இளங்குமணன். என்னென்னவோ எண்ணினான். உற்றுநோக்கினான்; அண்ணன் கைவாள் என அறிந்து என அறிந்துகொண்டான்; பிறந்த பாசம் அணு அணுவாக அவன் உதிரத்தோடு உதிரமாக ஓடி உணர்ச்சியை எழுப்பத் தொடங்கியது. அதன் பிறகு "ஐயகோ! அண்ணன் மறைந்தானோ?" என்று விம்மினான். அவன் தலைக்கு விலை வைத்த புல்லிய தன்மையை நினைத்து முட்டிக் கொண்டான்;