374
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
திரண்ட நிதியமும் தந்து வாழ்த்தினான். அவரது பண்பாட்டினை மறக்காதவனாய்ப் போற்றிப் புகழ்ந்தான். தன்னொடும் வைத்துக் கொண்டிருக்குமாறே அவன் விரும்பினாலும் கூட, உரிமையுடன் உலகுக்குப் பணியாற்றும் புலவர்களை ஓரிடத்தே இருக்குமாறு சொல்வது தக்கதன்று என்ற காரணத்தால் ஊருக்கு அனுப்புவித் தான்!
குமணனது தலையைக் காத்த சிறப்புமிக்க புலவரான சாத்தனார் புலவர்களாலும் ஏனையோராலும் பெருந்தலைச் சாத்தனார் என்று அழைக்கப் பெற்றார். ஆம்! குமணன் தலை பெருந்தலை தானே! அத்தலையைக் காத்துதவியவரும் பெருந் தலையுடைய பெருமகனார் தானே! வாழ்க பெருந்தலைச் சாத்தனார்! இன்னொன்றும் அறிதல் வேண்டும்! அவர் பிறந்த ஊர்ப் பெயரும் பெருந்தலை எனின் பெருமைக்கும் பெருமை தானே!
வாழ்க தமிழ்ச் செல்வம்
சாத்தனார் குமணனிடம் விடைபெற்றுக் கொண்டு தமது இல்லம் சேர்ந்தார். வெயிலிடைப் பட்ட புழுவென வறுமையிலே துடித்துக் கொண்டிருந்த வீட்டார் குமணன் தந்த வளத்தால் இன்புற்றனர். உண்பதற்கும், உடுப்பதற்கும், உறைவதற்கும், எத்தகயை குறைவு மற்றுச் சுற்றத்தாருடன் இனிது வாழ்ந்தனர். சாத்தனார் தந்த தமிழ்ச் செல்வத்தை ஊர் அனுபவித்தது; அவரது தமிழ்க் கவிச் செல்வத்தை ஊருடன் உலகமும் அனுப வித்துச் சிறந்தது. “வாழ்க தமிழ்ச் செல்வம்” என்ற வாழ்த்தொலி காதில் விழுமாறு சாத்தனார் பல்லாண்டுகள் வாழ்ந்தார்.
ஒன்றுபடுத்திய உயர்பண்பு
சாத்தனார் கல்வியறிவு மிக்க குடும்பத்திலே பிறந்தார்; தந்தையாரைப் போலவே கவிபாடும் திறம் பெற்றார்;அவர் வாழ்ந்து காட்டிய முறையிலேயே தம் வழியையும் வகுத்துக் கொண்டு வாழ்ந்தார்; வறுமையிலும் செம்மை காத்து மானத்தை உயிரினும் போற்றி வாழ்ந்த பெருமை இவருக்கு உண்டு. பகைபட்டுப் பிரிந்து நின்ற உடன் பிறந்தோர்களை ள ஒன்று சேர்த்த பெருங்குணத்தவரான சாத்தனார் வரலாறு உலகுக்கு இன்றியமையாதது. குறிப்பாகப் பகைமை மிக்குப் பிணக்குற்று நாடு நலிவுறும் காலத்தே, மிகமிக இன்றியமை யாதது. சாத்தனார் பண்புநலன் உலகைக் காப்பதாக! அவர் தந்த தமிழ் உலகை வளர்ப்பதாக!