376
மனைமாட்சி
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
பெருங்குன்றூர்கிழார் தக்க காலத்தே பள்ளிக் கூடம் சன்று எண்ணும் எழுத்தும் கண்ணெனக் கருதிக் கற்றார். இலக்கிய இலக்கணங்களில் கை தேர்ந்தார். கவிபாடுவதில் நிகரிலாப் புலமை பெற்று விளங்கினார். உலகியல் அறிவும் அறநெறிமாண்பும் இத்தகையதென எளிதில் அறிந்தார். சிற்றுயிர்க்கு உற்றதுணை கல்வியே என வாழ்ந்தார்.
பாடும் புலவரான பெருங்குன்றூர் கிழார் தகுதி மிக்க மங்கை நல்லார் ஒருவரை மணந்து இல்லறத்தை நல்லறமாக்கிக் கனிவாய் மழலை பொழியும் அருமைக் குழந்தையையும் பெற் றெடுத்தார். 'மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு” தானே!
கருத்தொத்த இல்வாழ்வு
பெருங்குன்றூர் கிழாருக்கு ஏற்ற அளவில் வருவாய் வரினும் அவரால் அதனைப் போற்றி வாழ முடியவில்லை. அவரது ஊரில் வாழ்ந்த பலர் வாழ்க்கை நடத்துவதற்கேற்ற வருவாய் எதுவுமற்று இருந்தனர். அவர்களில் பலருக்குப் பசித் துயரும், உடைப்பஞ்சமும் குடியிருப்புக் குறையும் ஏற்பட்டிருந்தன. மெல்லிய உள்ளம் படைத்தவரான கிழாரால் தம் நலமே குறியென வாழ முடியவில்லை.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பெரும் பண் பாடுடை ய அவர் உள்ளூரினரைப் பற்றியா கவலைப்படாது இருந்து விடுவார்? இருந்த பொருளனைத்தையும் எண்ணிப் பாராது ஏழை எளியவர்க்குத் தந்தார். கொடிய வறுமைக்கு ஆளானார். 'பிறருக்கு உதவுவதற்காக ஏற்படும் வறுமையைத் தம்மை விற்றுக் கூட வாங்கிக் கொள்ளலாம்” என்ற விரிந்த உள்ளம் உடைய கிழார் அடுத்த வேளைக்கு உணவு வேண்டுமே என்பதையும் எண்ணிப் பார்க்க மறந்துவிட்டார். அவர் வழிப் படியே செல்லும் மாண்புடைய மனைவியாரும் பிறருக்கு ஈந்துகாணும் இன்பத்திலே திளைத்தவர் ஆதலின் அவரும் இவர்தம் கருத்திற்கு இசைந்து நின்று உதவி புரிந்தார்.
சூழ்நிலை
கிழார் தம்வருவாய் தமது சுற்றத்தை வாட்டும் வறுமையைப் போக்கும் அளவுக்குப் போதாது என்று உணர்ந்தார். அதனால் குன்றூரின் வறுமையைப் போக்குவது அவரின் கடமையாகி