380
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
குற்றமற்ற கற்புடைய என் மனைவியைப் பிரிந்து உன்னை நோக்கி வந்தேன். அவளுடன் வாழும் வாழ்வையும் விட்டு நீங்கி ஓடி வருமாறு வறுமை தூண்டியது. பிரிந்து வந்த என்னை அப்பெண்ணின் நல்லாள் எதிர் நோக்கிக் கொண்டே - வழி நோக்கி விழி நீர் பாய்ச்சிக் கொண்டே - நிற்பாள். ஒரு சமயம் அவள் உயிர் இழக்கப் பெற்றாலும் பெற்றிருக்கலாம். அப்படி இழவாது இன்னும் இருப்பாளேயாயின் என்னை நினையாது இருக்கமாட்டாள்; நெஞ்சு கொதியாது இருக்கமாட்டாள். அறமற்ற கூற்றம் என் உயிரைக் கொள்ள வலிமையற்றதோ? என்னைக் கொள்ளமாட்டாது அது இறந்து பட்டதோ? என் உயிர் போவதாக!” என்று கூற்றத்தைத் திட்டிக் கொண்டே தன் வாழ்வையும் வெறுத்துக் கொண்டு இருப்பாள்.
அவள் துயரம் ஒழியுமாறு இப்பொழுதே யான் புறப் படுகின்றேன். நீ வாழ்வாயாக! வேந்தே! என்னைப் பார்! வறுமையை முன்னே செல்லவிட்டு அதன் பின்னே வருந்திய நெஞ்சுடன் யான் போகின்றேன் என்றார்.
இருவேறு இயல்பு
புலவர் உரை சேரலை அசைத்தது; பலவாறு சிந்திக்க வைத்தது. “நும்ம னோரு மற்றினைய ராயின் எம்மனோரிவண் பிறவலர் மாதோ" என்ற புலவருரை சேரன் இதயத்தைக் குடைந்தது. எளிய வளமும் வாய்ப்பும், ஏவலும் எடுப்பும் உடையவனா சேரன்? மூவேந்தருள் ஒருவன்; கொடை வள்ளல்கள் வழிவந்தவன்; பொய்யா நாவிற் புலவர்களால் பாராட்டப் பெறும் இயல்புடையவன்; நூலறிவும் நுண்ணறிவும் மிக்கவன்; அறத்தின் கூறும் மறத்தின் கூறும் தெள்ளிதின் அறிந்த ஒள்ளியவர்கள் மரபினன். ஆனால், “நேற்றுக் கொன்றது போல வந்து சென்ற வறுமை இன்றும் வருமோ?” என்ற ஏக்கமும், என்னாவாரோ என்னை நோக்கியிருப்போர்? உயிரோடுள்ளாரோ இறந்தாரோ? என்ற கொடுந் துன்பமும் உடையவர் புலவர்.
·
புலவர் புலமைத்துலைக்கோலைத் தூக்குகின்றார். சேரன் வளமையை ஒரு பக்கத்தே தூக்கித், தம் வறுமையை ஒரு பக்கத்தே வைக்கின்றார்; நெஞ்சு வெடித்து விடுவது போன்றதான வேற்றுமை ம நிலைக்கு ஆளாகின்றார். அறிவால் வாழும் வாழ்க்கையின் கொடுமைக் காட்சிகள் அவர் கண்முன் நின்று கூத்தாடுகின்றன. அவற்றைக் கண்டு வருத்தமுற்று.