பெரும் புலவர் மூவர்
389
மாறு அது தூண்டியது. அதனால் கிழார் கருத்துப் பொய்த்துப் போகாதவாறு பெருஞ் செல்வம் அளித்தான். புலவரைத் தக்க பெருமையுடன் ஊருக்கு அனுப்புவித்தான்.
புலவர் பொருட்பேறு
பெருங்குன்றூர் கிழார் வீடும் சுற்றமும் மகிழ்வு கொள்ளு மாறு வீட்டை யடைந்தார். யாவர் வறுமையையும் போக்கினார். விருந்தினர்களை எதிர்கொண்டு அழைத்துப் பேணினார். “செல்விருந்தோம்பி வருவிருந்து' பார்த்திருந்தார். இவ்வாறு சோழன் தந்த வளத்தால் ஊருக்குப் பயன்படும் வாழ்வு வாழ்ந் தார். ஆனால் பொருள் வாழ்வால் ஊருக்குப் பயன்பட்டு வரும் அவர், புலமை வாழ்வால் உலகுக்குப் பயன்பட வேண்டு மல்லவா! ஓரிடத்தே ஒடுங்கிக் கிடப்பது புலமையின் இயல்பும், புலவன் இயல்பும் இல்லையே! அதனால் தம் ஊரே தஞ்சமாய் இருந்துவிட விரும்பாதவராய்ச் சேரநாடு செல்ல விரும்பினார்.
மீண்டும் பொருளுக்காகத் தொடங்கிய படையெடுப்புத் தானா? இல்லை இல்லை! அவர் சேரநாடு செல்லுமாறு கால நிலை தூண்டியது. சேரநாட்டு மன்னன் செயல் தூண்டியது. மக்கள் நிலைமையும் தூண்டிற்று. பிறர்க்கென வாழும் பெருந் தகைமையும், அருளுள்ளமும் தூண்டின; புலவர் புறப்பட்டார். சேரநாடு சென்றது ஏன்?
து
சேரநாட்டிற்கு முன்னொரு சமயம் கிழார் போய பற்றியும், அப்பொழுது ஆட்சி செய்து வந்த குடக்கோச்சேரல் இரும்பொறை புலவரைப் போற்றாது வெறுங்கையினராய் அனுப்பி வைத்தது பற்றியும் அறிவோம். அவ்வரசன் இறந்து விடவே அவன் தம்பி இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி யேற்றான். அவன் மாபெரு வீரன். போர்வேட்கையில் இவ்வளவு அவ்வளவு என்னும் வரையறை அற்று வாழ்ந்தான். வாழ்வின் பெரும் பகுதியினைப் போர்க்களத்திலேயே செலவழித்துக் கொண்டே இருந்தபடியால் அவனை அரசியல் பணியில் ஈடுபடச் செய்யுமாறு விழைந்தே புலவர் சேரநாடு சென்றார். அங்கே சேரமன்னனையும் கண்டார்.
புலவர் சேரனைக் கண்டது அரண்மனையிலா? அரச அவையிலா? அந்தப்புரத்திலா? இல்லை? இல்லை!! போர்க் களத்தை அடுத்தமைத்திருந்த பாசறையிலே கண்டார். சேரன் போர்வாழ்வே பேர் வாழ்வெனக் கொண்டவன் அல்லவா!