பெரும் புலவர் மூவர்
391
உன்னைக் காணுவதற்கின்றி வேறு எதனைக் கருதியும். யான் இங்கு வந்தேனல்லேன். உனக்கு நான் கூற விரும்புவன அனைத்தும் கூட்டிச் சேர்த்துக் கூறினால் இந்த ஒன்றே தான். கனவில் கூட உன்னைப் பிரிதலை அறியாது அரண்மனையிலே தனித்து வருந்தி இருக்கும் உன் கற்புடைய பெருந்தேவியின் கூந்தல் பூவினைப் பெற வேண்டும். நெற்றி பொலிவினைப் பெறவேண்டும். அதற்காக இப்பொழுதே தேரினைப் பூட்டிப் புறப்படுவாயாக! அச் செலவு உனக்கு விருந்தாகும்; உன் தேவிக்கு நலமாகும்! உறங்காத கண்ணர்களாய்த் திரிந்து போர்புரிந்து வாழும் உன் பகைவர்களும் போரை நிறுத்திச் சிறிது கண் ணுறங்குவதற்குத் துணையாகும்" என்றுரைத்தருளினார்.
சேரனது வீர நெஞ்சம் புலவர் சொல்லை எண்ணியது. புலவரது அருளுள்ளத்தின் வேண்டுதலை அகற்றிவிட முடிய வில்லை. அவர் வேண்டியவாறே பாசறை நீங்கிப் புறப்பட்டான். உயிரோவியம்
தேவியின் பிரிவுத் துயரைத் தெளிவாக எடுத்துரைத்த தன்மையும், பகைவேந்தருக்காகப் பரிந்துரைத்த பான்மையும், சேரனின் தன்மைகளைப் போற்றிக் கூறிய செம்மையும், "நிற்காணுமாறே வந்தேன்” என்ற சீர்மையும் சேரன் செவியைத் திறந்தன என்றால் புகழ்ச்சி யுரையாகுமோ?
66
தேரினைத் தலைநகரம் நோக்கிச் செலுத்தினான். அவன் வரவினை எதிர்நோக்கியிருந்த தேவிக்கு விருந்தாயினான். வில்லும் வேலும் செய்ய மாட்டாத செயல்களைப் புலவன் சொல்லும் குறிப்பும் செய்து விடுகின்றன. காரணம் அன்று வாழ்ந்த புலவர்கள் நேரிய வாழ்வுடைய சீரியர்களாக இருந்தனர். அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் மக்களும் மன்னரும் மதிப்புக் கொடுத்தனர். புலவர் கூறும் நல்லுரையை ஏற்பதிலே பெருமை கண்டனர். அதனால் தான் புலவர் பாடும் புகழைத் தலையாய புகழாகக் கருதி அரசர்கள் வாழ்ந்தனர். இதனால் கெட்டா போய்விட்டார்கள்?
அவர்கள் ஆண்ட நாடு இன்று இல்லை! இருந்த நக ரில்லை! உறைந்த அரண்மனை இல்லை! உரிமைச் சுற்றம் உற்றார் எவரும் இல்லை. ஆனால் அவர்கள் புகழைப் பாடிக் கொண்டே இருக்கும் புலவர் தந்த பொய்யா உடல்கள் பாவடிவிலே அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவிய” மாகத் திகழ்கின்றன அல்லவோ? இவையனைத்தும் சாகாப் பேறு பெற்றவை தாமே?
66