2. அரண்மனை
‘பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்கிறார்கள். உண்மை தான்! ஆனால், இவ்வுரையை மாற்றி அமைக்க வல்ல மாண்பினர் எவரும் மாநிலத்தில் பிறக்கவில்லையா? ஊழையும் புறங்காணும் ஊக்கம் மிக்கவர்களைப் பசித்துயர் என்னதான் செய்துவிட முடியும்?
வறுமைப் புலவர்
ய
பெரிய அடுப்பு; உலையேற்றி எத்தனையோ நாட்கள் இருக்கும்; காட்டுக் காளாணும் வீட்டின் அடுப்பில் கொழுத்து வளரும் படியான வறிய வாழ்வு; பசியால் துடித்து அழும் பச்சைக் குழந்தை; அதனை ஆற்றும் வழிவகை எதுவும் அறியாத அன்புத் தாய்; இருவர் தம் இடர்மிக்க நிலைமையையும் எப்படித் தீர்ப்பது என்னும் ஏக்கமிக்க தந்தை - இத்தகைய குடும்பம்; குடும்பத்தின் தலைவர் யார்? வறுமைத் தந்தையை தலைவர்; அவர் ஒரு புலவர் - பெரும் புலவர்! பெருந்தலைச் சாத்தனார் என்பது அவர்தம் பெயர்.
முதிரத்து வள்ளல்
முதிர மலைக்குத் தலைவனும், நிகரில்லாத கொடை யாளனுமான குமணனைக் காணப் புறப்பட்டார். புலவர் சாத்தனார். ‘கொற்ற மாமுடி தாங்கிக் கோல் செலுத்திக் கொண் டிருப்பான்' குமணன் என்று எண்ணிக் கொள்ளை ஆசையோடு வந்த புலவர் குமணனைக்கண்டார் அல்லர். ஏன்?
ாய்
குமணனுக்கு இளங்குமணன் என்னும் தம்பி, ஒருவன் இருந்தான். அண்ணன் புகழ் ஓங்குவது கண்டு பொறாமையும், புலவர் முதலாயவர்களுக்கு வாரி வாரி வழங்கினால் பொருள் அனைத்தும் தொலைந்து போகுமே என்பதால் உண்ட கவலையும் கொண்டு அண்ணன் குமணன் மேலும், அடுத்து இருந்த பெருமக்கள் மேலும் கோபமும் கொதிப்பும் உடையவனாய் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கொடுஞ்சொல் கூறிக் கொண்டிருந்தான் அவன். ஆம்! அவன் அறநிலை பிறழ்ந்து