பண்டைத் தமிழ் மன்றங்கள்
409
போதற்கு இயலாது' என்று வந்த நோக்கத்தை யுரைத்தார் நொந்த புலவர்.
வாட் கொடை
6
و,
பாவம்! குமணன் யாது செய்வான்? “கொடிது கொடிது வறுமை கொடிது” என்பது உண்மை தான். ஆனால் வறுமைத் யரைக் கேட்ட கேட்ட அளவில் அதனை ஓ L வழிவகை வேண்டுமே! அல்லது, “எதுவும் தருதற்கு இல்லை; போய்வா என்று கல்லாக நின்று சொல்லுதற்கு ஏற்ற உள்ள உறுதியேனும் வேண்டுமே! புலவனைப் பற்றிய பொல்லாத வறுமையைக் கண்டு பொருமி அழும் புரவலன் குமணன் நெஞ்சத்தில் அத் தகைய வன்மை உண்டாகுமா? 'தருகை நீண்ட’ தனிப் பெருங் கொடையாளனாகிய அவன் கைகள் தாம் ‘வாளா’ கிடைக்குமா?
“நாட்டை இழந்தது என்னைப் பொறுத்த அளவில் சிறிய அளவில் கூடத் துன்பமாக இருந்தது இல்லை. நல்லவர்களும், கலை வல்லவர்களும் காப்பார் இன்றிக் கவலை அடைவார்களே என்ற கனிவால் ஏற்பட்ட துயரம் மட்டும் ஓரளவு எனக்கு இருந்தது உண்மை. “கருப்பைக்குள் முட்டைக்கும், கல்லினுள் தேரைக்கும் விருப்புற்று அமுது அளிக்கும் இறைவன்' இருக்கும் பொழுது இக் கவலை நமக்கேன் என்று துணிவு கொள்ள என்னால் முடிந்தது. ஆனால் வாட்டும் வறுமை, பிடர் பிடித்துத் தள்ளக் காட்டுக்கு வுந்த பாட்டுத் திறன் மிக்க பாவலனை ன வறுங்கையனாக விடுவதுதான் கொடுந் துயராக உள்ளது என்று ஏங்கினான். வரிசை அறிந்து வழங்கிப் பழகிய கை வாளா' கிடக்காமல், 'வாளை'த் தூக்கியது. 'புழுத்தலைப் புலையனேன்’ தலைக்குப் பெருமதிப்புள்ள விலை தருவதாகக் கூறியுள்ளான் தம்பி இளங் குமணன்; என் தலையைக் கொய்து கொண்டு சென்று கொடுத்து உம் வறுமையைப் போக்குக' என்று வலியுறுத்திக் கூறி வாளைப் புலவர் கையில் தந்தான். எழுத்தாணி' பிடித்து வளர்ந்த மெல்லிய நல்ல கை, வாளை வாங்கியது; ஏங்கியது உள்ளம்.
பொது நலப் புலவர்
ள
புலவர் உள்ளத்தே புத்துணர்வு ஒன்று புகுந்தது. 'நல்ல வேளை! நாட்டுக்கு நல்ல வேளை! இவ்வேளையை நழுவ விடுதல்”கூடாது என்று எண்ணினார். இவ்வாளை இவ் வள்ளல் கையில் இருந்து வாங்கியதே நலம்; இதனைக் கொண்டு எவ்வளவோ செய்யலாம்; இன்னாத பொழுதில் கூட இனிய