உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் மன்றங்கள்

411

வைத்து எண்ணப்படாமல் போய் ஒழிந்தார்கள் இத்தகை யவருள் ஒருவனா யான் வெற்றி கொண்டு வந்திருக்கும் வேந்தன்! வள்ளலின் வாள்

உடை

“கால் அளவும் தாழ்ந்து தொங்கும் மணிகள் ஒலிக்க, பார் அதிர நடந்து, களத்திலே வெற்றி காணும் அழகிய நெற்றியினை ய யானை முதலாக உள்ள உயர்ந்த பொருள்களையும் எண்ணிப் பாராமல் பாடி வந்தவர்களுக்குப் பரிசாகத் தரும் வள்ளல் குமணனைக் கண்டு என் வறுமை நிலைமையைச் சொன்னேன். 'பாடி வந்த புலவன் பரிசின்றி மீள்வது நாடு இழந்ததினும் மிகக் கொடுமையானது என்று எண்ணித் தன் தலையைத் தருமாறு வாளைத் தந்தான். உயிரினும் உயரிய பொருள் ஒன்று உண்டா? உயிர்க் கொடை பெற்ற உவகைக்கு ஓர் அளவும் உண்டா? அவ்வுவகை பிடர் பிடித்துத் தள்ளவே உன்னிடம் வந்தேன்” என்றார் சாத்தனார்.

விலங்கியல் விலகியது

புலவர் உரை,

ளங்குமணன் செவியைத்

தட்டித் திறந்தது; சிந்தனையை மூட்டியது. தன் செயல் தவறு மிக்கது என்பதைத் தெள்ளத் தெளிய எடுத்துக் காட்டியது. “வள்ளல் குமணனுக்கும் கேடு சூழ்ந்தாயே கொடியாய்!”என்று நெஞ்சம் குத்திக் குடைந்தது. களிறுகளை வெட்டி வெட்டிக் களத்திலே பரணி பாடிய வாள் சாத்தனார் கயில் இருந்தவாள் -, “கவிப் புலவன் கைப் பொருள் ஆனேன்' என்று இளங்குமணனை நோக்கிச் சிரிப்பது போல் ஒளிவிட்டது. இந்நிலைமையில் விலங்கு' நிலைமை வில ஓட ட மனித நிலைமை வந்து சேர்ந்தது.

அண்ணன் இருந்த காட்டுக்கு ஆர்வம் உந்த ஓடினான் குமணன் தம்பி. காலடியிலே வீழ்ந்து கண்ணீர் சொரிந்தான். கட்டித் தழுவி எடுத்துக் கலக்கம் போக்கினான் அண்ணன். புலவர் செய்த பொருள் மிக்க செயலை அறிந்தான் குமணன்.

பெருந்தலை

தம்பி வேண்டலும், புலவர் தூண்டலும் உந்தக் குமணன் காடு விடுத்து நாடு வந்து சேர்ந்தான். முதிரத்து மக்கள் மகிழ்வில் முதிர்ந்தனர். புலவர் சாத்தனார் குமணனது பெறற்கரிய தலையை பெருமை மிக்க தலையைக் காத்தமையால்

-

L