7. சிறைக் கோட்டம்
வீரம்
பற்பல வீட்டு வாயில்களில் மான் கொம்புகளைக் காண் கிறோம். சிலர் மான் தலையை மரத்தால் செய்து அதில் கொம்பைச் சேர்த்து உருவாக்கி வைத்துள்ளனர். கலைப் பொருள்களாக இன்று மான் தலையும், கொம்பும் காட்சி வழங்குகின்றன. ஆனால் அவற்றின் தொடக்கம் கலையால் அமைந்தது இல்லை! வீரத்தால் எழுந்தது!
மரபுப் பெருமை
ரு
வேட்டைக்குச் சென்றிருப்பான் ஒரு வீரன். அவன் வலியதும் அரியதும் ஆகிய விலங்குகளை வேட்டையாடி அழித்திருப்பான். அவன் ஆற்றிய வீரத்திற்கு அடையாளம் வேண்டாவா? வீழ்த்திய விலங்குகளை ஊரறியக் கொண்டு வந்தான்; வீழ்த்திய வீரத்தை நாடறியப் பரப்பினான். எனினும் அவை நிலைத்த அடையாளங்களாக அவனுக்குத் தோன்ற வில்லை. ஆகவே, தான் வேட்டையாடிய விலங்கின் தலை, கொம்பு, தந்தம், தோல் ஆகியவற்றை எடுத்து, அவை கெட்டுப் போகாமல் இருக்கவும், எழிலோடு விளங்கவும் ஏற்ற பாடங் களையும் வேலைப்பாடுகளையும் செய்தான். அவ்வாறு அமைக்கப் பெற்றவையே புலித்தலை மான் தலை, யானைத் தந்தம், மான் கொம்பு, காட்டெருமைத் தலை முதலியவை வ ஆகும். இப் பொருள்களை வீட்டின் உள்ளிடத்தே ஓர் இடத்தில் மறைத்து வைப்பதால் ஆவது என்ன? ஆகவே, வீட்டு வாயிலிலே, மாளிகை முகப்பிலே, அரண்மனை அரங்கிலே வீர விளக்கமான இக்காட்சிப் பொருள்களைக் கவினுற வைத்தான். இன்றும் பழைமை போற்றும் பல இடங்களில் இவற்றைக் காணலாம்; ஒவ்வொன்றின் உள்ளேயும் மறைந்து கிடக்கும் வரலாற்றுச் செய்திகளைத் தம் மரபுப் பெருமையாகக் கூறுவதைக்
கேட்கலாம்.
இங்குக் குறிப்பிடப் பெற்ற காட்சிப் பொருள்களுக்கு மாறுபட்ட ஒரு பொருள் ஒரு மன்னவன் அரண்மனை முகப்