உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446

இளங்குமரனார் தமிழ்வளம் 5

சேரன் மேலும் எண்ணினான். அவன் எண்ணம் புலியை வால் உருவி விட்டது போல் ஆயிற்று. என்ன எண்ணினான் அவன்?

குடிக்குக் குற்றம்

"போருக்குச் சென்று புண்பட்டு இறப்பதே புகழ் மிக்க இறப்பு என்று எண்ணுவது எம் குடிச் சிறப்பு. 'விழுப்புண் படாத நாளெல்லாம் வீண் நாள்' என்று கருதுவது எம் நாட்டு வீரம் ஒருவன் போரில் மாயாமல், நோயாலோ, பிற வகைகளாலோ இறந்தால் கூட அவனும் போர்க்களத்தில் புண்பட்டு இறந்த தாகவே எண்ணி அவன் மார்பை வாள் கொண்டு கிழித்துக் கட்டைமேல் அடுக்கிச் சுட்டெரிப்பது தொன்று தொட்டு வந்த எம் குலத்தினுக்குரிய வழக்காறு. இவ்வழக்கமும், முழு உருப் பெற்றுப் பிறந்து வளர்ந்த ஆட்களுக்கு மட்டுமே உண்டு என்பது இல்லை. குழந்தை உருப்பெற்று இறந்தே பிறந்தால்கூட, உருப் பெறாத தசைப் பிண்டமாகக் கருச் சிதைந்து வந்தால் கூட அவற்றையும் முழுத்த ஆள் என்றே கருதி வாளால் வெட்டிச் சுட்டெரிக்கத் தவறார் எம்மரபினர். இத்தகைய பழைமையும், வீரமும் போற்றும் குடியிலே நான் பிறந்தேன். அக்குடியின் வேந்தனாகவும் இருந்தேன். ஆனால், என் நிலைமை அவ் வீரர்குடிக்குச் சற்றேனும் ஏற்றதாக உள்ளதா?

நாவிற்கு இழிவு

போர்க்களத்திலே என் வீரர்கள் மடிந்தார்களே, அப் பொழுதே நானும் இறந்திருக்க வேண்டும்; இல்லையேல் என் கையில் தளை பூட்டினார்களே அப்பொழுதாவது ஆருயிரை நீத்திருக்க வேண்டும்; இல்லையேல், பகைவர் நாட்டு எல் லைக்குள் கால் வைத்த போதாவது முடிந்திருக்க வேண்டும்; இல்லையேல், இக் கொடுஞ் சிறைக்குள் அடைபட்ட போதி லேனும் உயிர்விடுத்திருக்க வேண்டும். இத்தனை இடங்களிலும் தவறினால் கூட,

66

“ஆவிற்கு நீரென்(று) இரப்பினும் நாவிற்(கு) இரவின் இளிவந்த(து) இல்

(குறள், 1066)

என்பதை நன்கு அறிந்த நான் ‘தண்ணீர் தா' என்று கேளாம லாவது இருந்திருக்க வேண்டும். இருப்புச் சங்கிலியால் பிணைத்து நாயை இழுப்பது போல் இழுத்துக் கொண்டு வந்து சிறைக்குள் தள்ளிய பகைவர்கள் தரும் தண்ணீரையும்