32
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
-
நல்லுரை நெருங்கினர். ஊரை வளைய வேலி இருந்தது. கல் வேலியா, முள்வேலியா இல்லை; முல்லை வேலி! ஊரே கமழ ஊரை வளைத்துப் போடப்பட்ட முல்லை வேலி! புலவர்கள் எண்ணினர்: தமிழர் கற்பு என்னும் பண்பின் அடையாளம் முல்லையாகக் கொண்டனர்! முல்லைக் கொடியை நட்டு வளர்ப்பதில் பேரின்பம் கொண்டனர்! இங்கோ முல்லை வேலியூரில், பேகன் மாற்றாள் ஒருத்தியின் மையலில் கிடக் கிறான் என எண்ணத் தக்கதாய் இருந்தது ஊர்வேலி!
ஊரில் பேகன் உறையும் இடத்தை அடுத்தனர். புலவர் தோழனாகிய பேகன் மனத்து என்ன நினைத்தானோ? புலவர்களைக் கண்டு மறைந்து கொள்ளவில்லை! புலவர்கள் அரண்மனைக்குச் சென்று ஆங்கில்லாமை அறிந்துதான் இங்கு வந்திருக்கக் கூடும் என எண்ணியிருப்பான்! அன்பொடும் பணிவொடும் வரவேற்று அவர்கள் இருக்கச் செய்து முகம் நோக்கினான்.
கபிலர், பேகனை நோக்கினார். “மலைவாணர்கள் மலை மேல் முகில் சூழ்ந்து மழை பொழிவதாக என வேண்டுவர்; மழை அளவுக்கு மேலே பெய்து விடுமானால், மழைபோதும் முகிலே மேலெழுக என வேண்டுவர்; மழை அவர்கள் வேண்டல்படி அகலுமானால் மகிழ்வர்; மலையின் விளைவாம் களையுண்டு உவகையராய் வாழ்வர்; அத்தகைய வளமிக்க மலை நாட்டு மன்னனே, பகைமேல் சினந்து போரிடுவதும் இல்லை என இரப்பவர்க்கு எல்லையிலாது ஈவதுமுடைய பேகனே,'
உணவு
"நாங்கள் நேற்று, காட்டுவழியே நடந்து வந்த களைப் பாலும் சுற்றத்தினர்க்கு, ஏற்பட்ட பசியாலும் முரசறைவதுபோல முழங்கிவிழும் அருவியை அடுத்த சிற்றூரைச் சார்ந்து நின்று உன்னையும், உன் புகழையும் பாடினோம்! அப்பொழுது எங்கள் உள்ளத்தை உருக வைக்கும் தோற்றத்தினளாய் கண்ணீர் வழிந் தோட ஒருமகள் வருந்தியிருந்தாள்! குழலின் அழுகையென அழுத அவள் யாவளோ யாவளோ தான்? நீ அறிவாயோ?
வினாவினார்.
“நின்னும் நின்மலையும் பாட,
குழல் இனைவதுபோல் அழுதனள் பேக! யார் கொல் அளியள் தானே!”
66
என
பேகன் பிரிந்து வந்த பிழையைச் சுட்டும் நயம்உள்ளதே. இதன் உள்ளிடை என்ன? இடித்துரைப்பது அன்று! இணைந்து வாழ்க என்பதாம்! யார் கொல் அளியள்? சிந்திப்பவன்