482
உலகம் உய்ய
உ
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
ஆற்றங்கரை எத்துணையோ நாடு நகரங்கைள் படைத்தது; நாகரிக வாழ்வினை நல்கியது; செல்வச் செழிப்பையும், கலைப் பேற்றையும் உதவியது; உயிர்களின் இனிய வாழ்வுக்கு உறு துணையாக அமைந்தது; அந்த ஆற்றங்கரையை ‘உலகம் உய் வதற்கு ஏற்ற உயர் மருந்து' என்று சொல்லத்தக்க ஒரு பாடலைப் பூங்குன்றன் வழியாக வழங்கியது. உலகம் அப்பாடல் முழுமையையும் ஏற்றாலும் ஏற்கட்டும்; ஏற்காமல் ஒழிந்தாலும் ஒழியட்டும்; யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் முதல் அடியையாவது அப்படியே ஏற்றுக் கொண்டால் அல்லாமல் அதற்கு உய்வு இல்லை.
6
அருந்தமிழ் அமிழ்து
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் குண்டு வகைகளும், வலவன் இன்றியே இயங்கி, வைத்த குறிதப்பாது தாக்கும் வானூர்தி வகைகளும் பேய் முழக்கம் செய்யும் 'நாகரிகப் போலி’ நாளிலே, 'உலகம் ஒரு குடி என்னும் உணர்வு உண்டாகாமல் உய்ய வழி உண்டா? உலகத்தின் அழிபாட்டை நீக்க ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழகத்து ஆற்றங்கரை தந்த ‘அரிய அமுதம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது. அவ்வமுதை அருந்தி உலகம் இன்புற்று வாழுமாக!