34
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
யாம்நின்னிடம் வேண்டும் பரிசில் அஃதொன்றுமேயாம்! உன் தேரில் உடனே ஏறி உன் துணைவியின் துயர் களைவாயாக என்றார்.
“நீ அருள் செய்தலே யாம் வேண்டும் பரிசில்;
உடனே தேர் ஏறுக’
99
என்பது புலவர் நெஞ்சத்தையும், நயத்தகு தூண்டலையும் வெளிப்படுத்தும்.(145)
அரிசில் கிழார் புலவர் பரணர் உரையைத் தொடர்ந்து, அவ்வாறே செய்வாயாக. உன்னிடம் ஆடை அணி முதலாம் எவற்றையும் யாம் பெற விரும்பவில்லை. வழக்கம் போல் உன்னையும் உன் நாட்டையும் யாம் பாட நீ வழங்கும் பரிசிலாக
ப்பொழுது யாங்கள் வேண்டுவது ஒன்றேயாம். அவ்வொன்றா வது, உன் அருளைப் பெறாளாய் அவலமே வடிவாய் விளங்கும் உன் இனிய மனைவி தன் கூந்தலில் மணம் கமழுமாறு தண்ணிய நறிய மலர் சூடி மகிழுமாறு உன் குதிரைகளைத் தேரில் பூட்டி உடனே னே அவள் இருக்கும் இடத்தை அடைவதேயாம் என்றார் (146). “நின் அருங்கல வெறுக்கை அவைபெறல் வேண்டேம்”
தண்கமழ் கோதைபுனைய,
வண்பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே!”
மனைவியின் துயர் தீர்த்தலே மாண்பரிசில் என்பதைக் கபிலர் பரணர் போலவே வலியுறுத்தினார். ஒருவர்க்கு மூவரு மாக உரைத்தவை அவனை வருத்தி உருக்கியது. அந்நிலையில், பெருங்குன்றூர் கிழார் வாளாவிருந்திலர். அவர் தொடர்ந்தார். ஆவியர் பெருமானே, யாம் கல்லும் காடும் அருவியும் ஆறு மெனப் பலமலைப் பகுதிகளைக் கடந்து வந்துநின்னையடைந் தோம். யாம் வரும் வழியில் வழக்கம் போல் வழிநடை தோற்றாமல் இருக்கவும் கற்றகலையின் காதலாலும் எம் சிறிய யாழை இசைத்துப் பாடினேம்; அதனை அப்பொழுது, கரிய வானத்து மழைத் துளியின் ஒலியைத் தனியே இருந்து கேட்டுக் கொண்டு ஒரு பக்கத்தில் நேற்று வருந்திக் கொண்டிருந்தாள் ஒருத்தி; செவ்வரி படர்ந்ததும் நீர் ஒழுகுவதுமாகிய கண்ணை யுடைய அவள், நெய்பூசப்படாத கரிய கூந்தலைக் கழுவப்பட்ட நீலமணிபோல் விளக்கக் கழுவிப் புதுமலர் பொலியச் சூடுமாறு இன்று இங்கிருந்து புறப்படுக. அதுவே யாம் வேண்டும் பரிசில்' என்றார் (147).
6